Header Ads



கைபர் மலை பகுதியில் முஸ்லிம் போராளி குழுக்களிடையே மோதல்..!


பாகிஸ்தானில் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள திரா பள்ளத்தாக்கின் பெரும்பாலான கிராமங்கள் தலிபான் மற்றும் அன்சருல் இஸ்லாம் கட்டுப்பாட்டில் உள்ளன.

இங்கு அவர்கள் முகாம்களை அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதான் என்ற கிராமம் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை கைப்பற்றுவதில் தலிபான் மற்றும் அன்சருல் இஸ்லாம் களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய துப்பாக்கி சன்டை தொடர்ந்து நடந்தது.

நேற்று இரவு வரை நடந்த சண்டையில் மொத்தம் 53 பேர் பலியாகினர். அவர்களில் 30பேர் தலிபான்கள். 23 பேர் அன்சருல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள். இருபிரிவினருக்கு இடையே நடந்த சண்டையில மைதான் கிராமத்தின் 4 முக்கிய இடங்களை கைப்பற்றியதாக அன்சருல் இஸ்லாம் அமைப்பு தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.