Header Ads



வெள்ளத்தில் மூழ்கியிருந்த மல்வத்துஓயா பள்ளிவாசல் மீது கோழைகள் மீண்டும் தாக்குதல்



அநுராதபுரம் - மல்வத்துஓயா லேன் பள்ளிவாசல் மீது காடை கூட்டமொன்று மற்றுமொரு தடவை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இன்று அதிகாலை புதன்கிழமை, 9 ஆம் திகதியே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளிவாசல் ஏற்கனவே வெள்ளநீரில் மூழ்கியிருக்கையில், பள்ளிவாசல் மீது ஏறிய நின்றே பள்ளிவாசலின் முற்பகுதி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெறும் சத்தம் கேட்டு, பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மக்கள் ஓடிவந்து பார்த்தபோது பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்ட கோழைகள் கூட்டம் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

கடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று இப்பளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை இதுவரை கைதுசெய்யாத பொலிஸ், இன்று இரண்டாவது தடவையும் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணைகளை ஆரம்பிதுள்ளதாம்.

No comments

Powered by Blogger.