Header Ads



ஷிராணியை பதவிநீக்கிய ஜனாதிபதி மஹிந்தவிற்கு கனடா கொடுத்த அதிர்ச்சி

(Ada) ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியதன் மூலமாக பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடா பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். 

இவ்வாண்டு இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடா பங்கேற்காது என ஏற்கனவே எச்சரித்திருந்தது. 

இதேவேளை பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கனடா வலியுறுத்தியது. 

2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்ளாட்டு போர் முடிவிற்கு கொண்டு வந்ததன் பின்னர் மனித உரிமைகள், ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டும் பொறுப்பு இலங்கை அரசிற்கு உள்ளது எனவும், இவ்விடயம் குறித்து கனடா அவதானம் செலுத்தி வருவதாகவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். 

உலக நாடுகள் பலவற்றின் கண்டனங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதிபதியரசர் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

2 comments:

  1. எல்லாம் முடிந்த பிறகுதான் தீர்மானமே எடுப்பானுகள்..

    ReplyDelete
  2. இவனுகளுக்குத்தான் அசோக்கா சொன்னான்.

    என்கிட்டே இடுவம்புக்கும் அறியாமைக்கும் மருந்து இல்லை என்று.

    ReplyDelete

Powered by Blogger.