வடகொரியாவில் பசிக் கொடுமை - மனிதனை மனிதன் சாப்பிடும் அவலம்
வடகொரியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பசிக்கொடுமையால் குழந்தைகளை கொன்று தின்னும் கொடூர சம்பவங்கள் நடைபெறுகின்றன.
வடகொரியாவில் வடக்கு மற்றும் தெற்கு வாங்கே மாகாணத்தில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கு உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தெற்கு பியாங்யாங்கிலும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பசி, பட்டினிக்கு 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், உணவுக்காக மனிதர்கள் மனிதர்களை கொன்று தின்னும் அவலம் நடைபெறுவதாக ஆசியா பிரஸ் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது ஜப்பானில் உள்ள ஒசாகா என்ற இடத்தில் இருந்து வெளியாகிறது.
அதில், ஒருவர் தனது 2 குழந்தைகளை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை காரணமாக அவரது மனைவி வெளியூர் சென்று இருந்தபோது மூத்த மகளை கொன்று தின்றார். பின்னர் தனது மகனையும் அவ்வாரே சாப்பிட்டு முடித்தார்.
வெளியூரில் இருந்து திரும்பிய மனைவிக்கு தனது மகனின் இறைச்சியை உணவாக வழங்கினார். இதுகுறித்து கேட்டதற்கு தனக்கு இறைச்சி கிடைத்தது என்றார். பின்னர் அதுபற்றி கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். சாங்டான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நபர் பசியால் மனநிலை பாதித்து பைத்தியம் ஆனார்.
பின்னர் தனது குழந்தையை கொன்று உணவாக சமைத்து சாப்பிட்டார். இவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்றும் அதில் ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை வடகொரியா அரசு உறுதிபடுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால், தான் முன்னேறிய நாடு போன்று உலகுக்கு காட்டி கொள்கிறது. அணு ஆயுதங்கள் தயாரிப்பது. நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டுகளை ஏவி அண்டை நாடுகளை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
Post a Comment