மாலி போராளிகளின் வீரம் - பிரான்ஸ் ஆக்கிரமிப்பு படைகள் திகைப்பு
(தூது) மாலி போராளிகளுடன் நடைபெற்று வரும் ஆரம்பக்கட்ட போரிலிருந்து ப்ரான்ஸ் எதிர்பார்த்ததைவிட பாலைவனப் போராளிகள் மிகவும் உயர்தர ஆயுதங்கள் தரித்தவர்கள் என்றும் நன்கு போராட்டப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ப்ரான்ஸ் மற்றும் ஐ.நா அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரக்கூடிய வாரங்களில் அல்லது மாதங்களில் மாலி போராளிகளுக்கு எதிரான இந்தப் போரில் இரத்தக்களரி ஏற்படப் போகின்றது. இதனால் ப்ரான்ஸின் நேச நாடுகள் இந்தப் போரில் கலந்து கொள்ளத் தயங்குவார்கள் என்று கருதப்படுகின்றது.
மாலியில் ஏற்படப் போகும் தோல்வியின் பாதிப்பு மாலி மக்களுக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் சேர்த்துதான் என்று ஆஃப்ரிக்க அதிகாரி ஒருவர் கடந்த வியாழன் தெரிவித்தார்.
பக்கத்து நாடான அல்ஜீரியாவில் மாலி போராளிகளின் ஆதரவாளர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்களை பிணையாளிகளாக்கிய சம்பவத்தில் 34 பிணையாளர்களும் 11 போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது போலவே மாலியின் எல்லையைத்தாண்டி இந்தப் போர் தொடரும் எனத்தெரிகின்றது.
மாலியில் போராளிகள் மீது பிரான்சு நாட்டு ராணுவம் தரை வழி தாக்குதலை துவக்கியுள்ளது. போராளிகள் கைப்பற்றிய தியாபாலி நகரத்தில் உள்நாட்டு ராணுவத்துடன் பிரான்சு ராணுவமும் தரை வழி தாக்குதலை துவக்கியுள்ளது. பிரான்சின் ஏராளமான ராணுவ டாங்குகள் இந்நகரத்திற்கு வந்துள்ளன.
“நமது எதிரிகள் மிகவும் உயர்தர ஆயுதங்கள் தரித்துள்ளனர்; நன்கு போராட்டப் பயிற்சி பெற்றுள்ளனர்” என்று ப்ரென்ஸ் நாட்டு தூதரக அதிகாரி தெரிவித்தார்.
நிக்கோலஸ் வான் டி வாலே, கார்னெல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், “மாலி போராளிகள் இந்தக் கடின நிலப்பரப்புகளினூடே எல்லைகளைத்தாண்டி போராடக்கூடிய பயிற்சியைக் காணும் பொழுது சுவராசியமாக இருக்கின்றது”, என்று அவரின் மாலி போராளிகளின் திறமைகளைப் பாராட்டுகின்றார்.
Post a Comment