Header Ads



கிழக்கு மக்களின் தேவைகள், குறைபாடுகளை கண்டறிய நேரடிச் சந்திப்புக்கு ஏற்பாடு


(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாண மக்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை  கண்டறியும் பொருட்டு மக்களுடனான நேரடிச் சந்திப்பை மேற்கொள்ளுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது,

கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேசமாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்கள் வேண்டி நிற்கும்  தேவைகள் மற்றும் குறiபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அம்பாறை மாவட்ட மக்களுடனான நேரடிச் சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் நடைபெறும். இதன் பிரகாரம் எதிர்வரும் 6ஆம் தெஹியத்தக்கண்டிய பிரதேச மக்களுடனான சந்திப்பும் 7ஆம்  திகதி பதியத்தலாவ மற்றம் மாகஓயா பிரதேச மக்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், 12ஆம் திகதி அக்கறைப்பற்றுப் பிரதேச மக்களுடனான சந்திப்பு அக்கரைப்பற்றிலும் 13ஆம் திகதி மருதமுனை மக்களுடனான சந்திப்பு மருதமுனையிலும் இடம்பெறுமென அமைச்சர் உதுமாலெவ்வை தெரிவித்தார்.

இதுதவிர, காரைதீவு மற்றும் பொதுத்துவில் பிரதேச மக்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதகவும் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் பிரச்சினைகளை அவர்களின் பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று கண்டறிவதன் மூலம் அவர்கள் வேண்டி நிற்கும் தேவைகள் மற்றும் குறைபாடுகளின் உண்மைத்தன்மையை உணரவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க  இலகுவாக அமையுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் 

No comments

Powered by Blogger.