Header Ads



‘இவள் ஒரு ஆச்சரியம்'

விபரீத நோயால் பாதிக்கப்பட்டு 30 எலும்புகள் நொறுங்கி பிறந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக நல்ல நிலையில் உயிர் வாழ்ந்து வருகிறது. இங்கிலாந்தின் செஷயர் பகுதியை சேர்ந்தவர் மிலி சிம்சன். கர்ப்பமாக இருந்த இவருக்கு ஸ்கேன் செய்த டாக்டர்கள், வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்புகள் உறுதியற்று இருப்பதாகவும் பல எலும்புகள் உடைந்து காணப்படுவதாகவும் கூறினர். அடுத்தடுத்த முறை அவர் ஸ்கேன் செய்ய வந்தபோது, குழந்தையின் பல எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது. அனேகமாக, குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றனர் டாக்டர்கள். கருக்கலைப்பு செய்துகொள்ளவும் அறிவுறுத்தினர். ‘ப்ளீஸ், அந்த குழந்தைக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாமே. பிரசவம் வரை காத்திருக்கிறேன்’ என்றார் மிலி. 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. 

பிறந்தபோது, விலா எலும்புகள் உள்பட மொத்தம் 30 எலும்புகள் அவளது உடலில் நொறுங்கிய நிலையில் இருந்தன. கால்சியம் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட ‘பிரிட்டில் போன் டிசீஸ்’ என்று டாக்டர்கள் கூறினர். உடலுக்கு ஒரு வடிவம் கிடைக்காமல் கூனி குறுகிய நிலையிலேயே இருந்த குழந்தை 8 மாதங்களுக்கு பிறகு தான் உட்காரவே தொடங்கியது. சமீபத்தில் 2-வது பர்த்டேயை வெற்றிகரமாக கொண்டாடியிருக்கிறாள் குழந்தை. தொடர்ச்சியாக கால்சிய மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுத்து வருகிறாள். ஆனாலும் கூட லேசாக விழுந்தாலே, சற்று அழுத்தமாக தொட்டாலே எலும்புகள் உடைந்து விடுகிறதாம். ‘இவள் ஒரு ஆச்சரியம்.. அற்புதம்.. சிறப்பாக வளர்த்துக் காட்டுவேன்’ என்று பூரிக்கிறார் மிலி.

No comments

Powered by Blogger.