இலங்கை முஸ்லிம்களின் உடனடி கவனத்திற்கு..!
(அபூ அஹ்மட்)
இன்னும் 14 நாட்களில், அதாவது எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் 65வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.
இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், மிக அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம்கள் தங்களின் நாட்டுப்பற்றையும், மற்றைய சமூகங்களோடு தங்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதற்க்கு, எதிர்வரும் சுதந்திரதினமானது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அரிய சந்தர்ப்பமாகும்.
இன்று நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய நிலமையிலும், தேசியக் கொடியை கையில் எடுக்க வேண்டிய நிலமையிலும் உள்ளோம்.
கீழ்க்குறிப்பிட்ட முறைகளில், இதில் நாம் பங்குபற்றலாம்:
1. நமது வீடுகளிலும், வியாபார ஸ்தலங்களிலும் பெரிய அளவிலான தேசியக் கொடிகளை பறக்கவிடுதல்.
2. ஊரின் பொதுவான இடங்களில் காலையில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தல்.
3. இலங்கையின் சரித்திரத்தையும், நாட்டிற்க்காக நமது முன்னோர்களின் தியாகங்கள், பங்களிப்புகள் பற்றி உரைகளை ஏற்பாடு செய்தல்.
4. நாட்டிற்க்காகவும், சமாதானத்திற்க்காகவும் பள்ளிவாயல்களில் துஆப்பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்தல்.
5. நமதூர்களிளுள்ள மற்றைய சமூகங்களைச் சேர்ந்த அரச மற்றும் இரானுவ உயர் அதிகாரிகளை மேற்படி விழாக்களுக்கு அழைப்பதோடு, அவர்களுக்கு மிகச் சிறந்த அன்பளிப்புகளையும் வழங்குதல்.
6. வைத்தியசாலை, சிறைச்சாலை, அரச அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குதல்.
சுதந்திர தின கொண்டாட்டங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், தங்களது ஊர்களில் மாற்று சமூகத்தவர்களின் நல்லெண்ணெத்தைப் பெறுவதற்க்கும், அவர்களோடு நமது உறவை அதிகப்படுத்துவதற்க்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவும். அத்தோடு அனைத்து முஸ்லிம்களது நன்மை கருதியும், நமது எதிர்கால சந்ததிக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக நினைத்தும், எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் முற்றுமுழுதாக பங்குபற்றுவதற்க்கு அனைவரும் உறுதி பூனுவோம்.
சரியாகச்சொன்னீர்கள் !இக்கால கட்டத்தில் ,பாடசாலைகள் அவர்கள் மட்டத்திலும் ,பள்ளிவாசல்கள் ,நலன்புரி இயக்கங்கள் இணைந்து சுதந்திரத் தினக் கொண்டட்டங்களை தத்தமது ஊர்களில் கொண்டாடலாம். விளையட்டுப்போட்டிகளை நடத்தலாம் ,சிறந்த பரிசில்களை வழங்குவதன் மூலம் ,
ReplyDeleteஅணைத்து இன மக்களோடும் உறவை பலப்படுதிக்கொல்லளாம்.
7 வது ஒன்று உள்ளது அதை மறந்துவ்ட்டீர்கள் .அன்று காலையில் நமோ நமோ மாதாஎன்ற பாடலையும் எல்லா முஸ்லிம் வீடுகளில்லும் பாட சொல்லலாம் அல்லது சீடி இருந்தால் போட்டும் விடலாம்
ReplyDelete65 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதற்காக அமைச்சரின் (மண்ணின் மைந்தனின்) அடி ஆட்கள் பிரதான வீதியில் தலை கீழாக கொடி கட்டியது போலல்லாமல் ...........சரியாக கட்டி ஏற்றவும்.
ப்ளீஸ்.
I don't know why we have to do all these things compulsorily. This is the time to show our strength. So, as a one community without any political differences, we all have to get together in one place and have some sort of speeches about Islam, show some slogans about our patriotism etc. MEELADUN NABI IS THE BEST DAY FOR THIS.
ReplyDeleteAbu Ahamed,
ReplyDeleteஒரு விடயத்தை அணுகும்முறையிலே இரு வழிமுறைகள் இருப்பதுண்டு. ஒன்று அறிவுபூர்வமான முறை மற்றையது யதார்த்தபூர்வமான முறை.
இதிலே நீங்கள் கூறியிருப்பது நிச்சயமாக யதார்த்த பூர்வமானது என்பதில் நிச்சயம் உங்களுக்கே சந்தேகம் இருக்காது என்று நம்புகின்றேன். ஏனெனில் இன்று இந்த நாட்டிலே நாம் சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகளால் சித்திரிக்கப்பட்டுவருகின்ற நிலைமைகளின் தீவிரத்தையும் இதைப்பயன்படுத்தி சில சந்தர்ப்பவாத சிறுபான்மை இன அரசியல்வாதிகளின் நயவஞ்சகங்களையும் பார்க்கும்போது இதைத்தவிர வேறு வழியில்லை போலத்தான் தெரிகின்றது.
ஆனாலும் அறிவுபூர்வமான நிலையிலே சிந்தித்துப் பார்த்தால் நாம் பிறந்த மண்ணின் சுதந்திரத்தை நம்மால் உளப்பூர்வமாக கொண்டாடக்கூடிய மனோநிலை ஏற்படாதது ஏன் என்றும் அதனைத் தொடர்ந்து சுதந்திர தினம் என்பது நம்மவர்களிடையே இப்படியெல்லாம் யாசித்து கொண்டாடும் நிலையில் ஏன் உள்ளது என்றும் கேள்விகள் எழுகின்றன.
good news
ReplyDeleteசுதந்திரம் இல்லமல்
ReplyDeleteசுதந்திரம் கொண்டாடுவோம்
யாழ் முஸ்லிம் வசகர்கள் அனைவருக்கும் விலங்கிடப்பட்ட சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Intha naadu muslimgal kadantha 61 warugalamaga ningal kuriyathaium vida mealaga entha nadinai kaurave paduthi ullaner.athu thariyatha entha enawatha kudugaduku.
ReplyDeleteIwargal madayargal apadithan nallah nadanthadum awargal seiwathai than saiwarvgal
கந்தக் – அகழ்ப்போர்.
ReplyDeleteபகைவர்களை எப்படி சமாளிப்பது என்பதற்கான நபி(ஸல்) அவர்களின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸல்மான் ஃபார்ஸி(ரலி)யின் (தற்காப்புத் தந்திர) ஆலோசனை,
அஷ்ஜஃ கோத்திரத்தைச் சேர்ந்த நுஐம் பின் மஸ்வூத் என்பவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் கூறியது,
போர் என்பதே ஒரு சூழ்ச்சியாகும் என்ற நபியின் முன்மாதிரி.
போன்ற வரலாற்றுச் சம்பவங்களினதும் அதன் படிப்பினைகளினதும் அடிப்படையில் இது ஒரு நல்ல ஆலோசனையாகும்.
Please brothers , spread out this message to all jumma masjids . It may helpful our people to follow this informations.
ReplyDeleteAbu Ahmed is a soft hearted person. He delivered his genuine thoughts in the best interest of the musim ummah. I welcome his effort.
ReplyDeletealways we all shuld corporate to gether for this chance as advice it will help full for them to know about islam and eiman yakeen ikram
ReplyDelete