லண்டனில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க தீர்மானம்
(Tr)
லண்டனில் உள்ள பள்ளிகளில், ஏழை மாணவர்கள், காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவதை, மேயர் கண்டுபிடித்தார். தற்போது அவர்களுக்கு, இலவச காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.லண்டனில், 5,000க்கும் அதிகமான ஏழை மாணவர்கள், காலை உணவு சாப்பிடாமல், பட்டினியுடன், பள்ளிக்கு வருகின்றனர்.
இதை கண்டுபிடித்த ஆசிரியர்கள் பலர், இந்த மாணவர்களுக்காக, தினமும், வீட்டிலிருந்து கூடுதலான உணவை எடுத்து வந்து, இவர்களுக்கு வழங்கி வந்தனர்.விஷயத்தை கேள்விப்பட்ட லண்டன் மேயர், போரிஸ் ஜான்சன், அறக்கட்டளையிலிருந்து, 6 கோடி ரூபாயை, மாணவர்களின் காலை உணவு திட்டத்துக்காக வழங்கியுள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 95 சதவீத ஆசிரியர்களும், மாணவர்களும் சாப்பிடாமல், பள்ளிக்கு வந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. மேயர் நிதியுடன், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், காலை உணவு திட்டத்துக்கு, நிதி அளிக்க முன்வந்துள்ளன.
Post a Comment