பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான இலவச பற்சிகிச்சை
(பி. முஹாஜிரீன்)
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் பற் சிகிச்சைப் பிரிவினால் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான இலவச பற்சிகிச்சை இன்று (29) நடத்தப்பட்டது.
பாடசாலை அதிபர் ஐ.எம். பாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் எம்.எம். பைறூஸ், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம். ஜெசீல்ஆகியோர் கலந்துகொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 40 மாணவர்களுக்கு சிகிச்சையும் மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.
Good work but why don´t wear working dress this doctors?if you work with patiens always should wear working dress because of specially dental cleaning times much virus and bad small and durties much.
ReplyDeleteAlso should wear patiens during the dental process black eyes glass,patiens shouldn´t watch dental process light.