Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடுகிறது - பஷீரின் அமைச்சு தெரிவு குறித்து தெளிவில்லை!


முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பெற்றுள்ள அமைச்சுப் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்குரியதா அல்லது பஷீர் சேகுதாவூத்திற்குரியதா என அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலியிடம் எமது இணையம் வினா தொடுத்த போது, என்னை வம்பில் மாட்டிவிடாதிர்கள் என அவர் பதில் வழங்கினார்.

பஷீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவியை பெறுவதற்கு முன் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திடம் அனுமுதி பெற்றாரா எனவும் எமது இணையம் ஹசன் அலியிடம் கேட்டபோது, அதற்கு இல்லையென பதில் வழங்கிய ஹசன் அலி, தலைவர் ரவூப் ஹக்கீமிடமிடமிருந்து பஷீர் சேகுதாவூத் அனுமதி பெற்றாரா என்ற விடயம் தமக்கு தெரியாதெனவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகச் செயலாளர் டாக்டர் ஹபீஸ் நஸீரிடம் கேட்டபோது, இதுகுறித்து எனக்கு தெரியாது. நான் ரவூப் ஹக்கீமின் ஊடகச் செயலாளர் மாத்திரமே என்றார்.

அதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடவுள்ளதாக ஹசன் அலி எம்.பி. கூறினார்.

இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை குறித்து அந்த கட்சியின் ஆதரவாளர்களிடையே பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. அதுபற்றிய சில தகவல்கள் எமது இணையத்திற்கு கிடைக்கப்பெற்றன. இருந்தபோதும் அவை உறுதி செய்யப்படாமை காரணமாக நாம் அவற்றை இங்கு பதிவு செய்யவில்லை.

3 comments:

  1. நாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினை எவ்வளவோ இருக்க இவரது அமைச்சு பற்றி அலசுவது அவசியமற்றது, எல்லாம் வல்ல ஏக இறைவன் திருமறையில் "நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கிறான்" என்பதைத் தெளிவு படுத்துகிறான். முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி. இது இஸ்லாத்தைப் பாதுகாக்கும் இயக்கம் அல்ல. ஒரு அரசியல் கட்சிக்குண்டான இயல்புகள் இதிலும் தாராளம் உண்டு. இஸ்லாத்தைப் பற்றிக் கவலைப் படும் ஒருவர் அனேகமாக இலங்கை அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. இவர்களை விடுவோம். உலக முஸ்லிம்களுக்காய் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோம் இன் ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. இதை தான் நாங்கள் Pre-Plan என்போம் ஏற்கனவே பசிர் அவர்கள் ஹரிசுடன் சேர்ந்து இன்னும் சில உறுப்பினர்களுடன் அரசுடன் கைகோர்த்து தனக்கு அமைச்சு பதவியும் ஹரிசுக்கு பிரதி அமைச்சு பதவியும் என்று எண்ணி இருந்தார் ( இதைத்தான் தலைவர் பல மேடைகளில் மறைவாக கூறியும் இருந்தார் ) ஆனால் இப்போது தலைவரும் சேர்ந்து அரசுடன் இருப்பதால் பசிருக்கு மாத்திரமே கௌரவம் (அரசினால்) அளிக்கப்பட்டுள்ளது..... எது எப்படியோ 1 அமைச்சும் 1 பிரதி அமைச்சும் கிடைத்து கட்சி பிளவு பட்டு இருப்பதை விட 2 அமைச்சுப்பதவியுடன் ஒற்றுமையாக (வெளிதோற்றத்திட்கு) இருப்பது மேல் என்று யோசித்த தலைமைக்கு வாழ்த்து .......

    ReplyDelete

Powered by Blogger.