Header Ads



சிரியாவில் எனக்கெதிராக போரிடுபவர்கள் மேற்கத்திய நாடுகளின் அடிமைகள் - பஷர் ஆசாத்


டமாஸ்கஸ் கலை மற்றும் கலாச்சார மைய நிகழ்ச்சி ஒன்றில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கலந்துகொண்டு அரிதாய் இன்று பேசினார். அப்போது அவர் போராளிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதுகுறித்து அதிபர் ஆசாத் பேசியதாவது:-

மேற்கத்திய நாடுகளின் அடிமைகளாக போராளிகள் செயல்படுகின்றனர். உண்மையான சண்டையின் பாதிப்பை நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த இரத்தக் களரியான சண்டையை கைவிட்டு, ஆட்சியில் பங்கேற்க போராளிகளை அழைக்கிறேன். இத்திட்டம் குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும்.

உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்திக்கொள்ளவேண்டும்.  அதன்பிறகே ராணுவ தாக்குதலும் நிறுத்தப்படும். அப்போதுதான் அகதிகளாக வெளியேறியுள்ளவர்கள் மீண்டும் இங்கு வரமுடியும்.

பிறகு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ போராளிகளுடனான தேசிய பேச்சுவார்த்தை மாநாட்டு வழிகளை அரசு ஏற்படுத்தும். ஆனால் வெளிநாடுகளின் உத்தரவை ஏற்கமாட்டோம். நாங்கள் அதிகார வர்க்கத்தோடு மட்டுமே பேசுவோம். ஆனால் அடிமைகளுடன் பேச மாட்டோம். 

எடுக்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பொது ஜன வாக்கெடுப்பும், பிறகு பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் பேசினார். 

No comments

Powered by Blogger.