Header Ads



இருதய சிகிச்சைக்கு உதவி கோருகிறார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலம்சென்ற நைனா முஹம்மது அவர்களின் மகளும் முஹம்மத் தாஹிர் அவர்களின் மனைவியுமாகிய பரீனா என்பவருக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பைபாஸ் ஒபரேஷன் செய்யவேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதிஷ்டவசமாக இவருக்கு அரசாங்க வைத்தியசாலையில் ஒபரேஷனை செய்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய ஒபரேஷனுக்கு தேவையான சில மருத்துவ உபகரணப் பொருட்களை மட்டும் இவர்கள் வாங்கிக் கொடுத்தால் போதுமானது எனவும் வைத்தியத்துக்கான சில கட்டணங்களை ஜனாதியதி செயலகம் பொறுப்பேற்றுள்ளதுடன் அப்பணத்தை வைத்தியசாலைக்கு கொடுத்தும் விட்டது. இந்நிலையில் இவரின் ஒபரேஷன் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதிக்கு முன்னர் செய்யப்பட வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். 

இவர் ஒரு ஆசிரியை. கணவன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தொழிலில்லாமல் உள்ளார். எனவே இவரது ஒபரேஷனுக்கு  ஒரு இலட்சம் ரூபா தேவையாக உள்ளது. உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுமாறு இவர்களின் குடும்பம் வேண்டி நிற்கிறது. வங்கி கணக்கு விபரங்கள் பின்வருமாறு.

M.T. Fareena
A/C No: 034200120716179
Peoples bank
Negombo 
Sri Lanka 

No comments

Powered by Blogger.