Header Ads



பனியில் உறைந்தது ஐரோப்பா (படங்கள்)


கடும் பனியில் ஐரோப்பா நாட்டின் பெரும்பாலான பகுதிகள் உறைந்துவிட்டன. இதனால் 3,000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெளியில் நடமாட முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலைகள், விமான நிலையங்கள், ரயில் தண்டவாளங்களில் பனி மூடிக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

உலகின் மிக பிரபலமானதும் பரபரப்பானதுமான ஹீத்ரு விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். பனி காரணமாக இந்த விமான நிலையத்தில் நேற்று மட்டும் 365 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓடு பாதைகளில் மலை மலையாய் குவிந்துள்ள பனியை 24 வாகனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.இதேபோல் பிர்மிங்காம் ஏர்போர்ட், சவுத்டாம்டன் ஏர்போர்ட்களிலும் பல விமானங்கள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து முடங்கியதால், நாடு முழுவதும் 3,000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மக்கள் வெளியில் நடமான முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், பனிப்பொழிவு தொடர்ந்து இருக்கும் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும். அதனால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


No comments

Powered by Blogger.