பசும்பால் + கீரைக்கஞ்சி + பழச்சாறு + சிவப்பரிசி சோறு - மாணவர்களுக்கு கட்டாயம்
(sfm) சிற்றுண்டிச்சாலைகளுக்கான தேசிய உணவுக் கொள்கையொன்றை தயாரிக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலைகள் பல்லைக்கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் தேசிய உணவுக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தோன்றியுள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.
பசும்பால், கீரைக்கஞ்சி, பழச்சாறு மற்றும் சிவப்பரிசி சோறு ஆகியவற்றை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
Post a Comment