Header Ads



நீதிமன்றமா..? பாராளுமன்றமா..??


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளார். 

தமக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினை கலைக்க வலியுறுத்தி, பிரதம நீதியரசர் தாக்கல் செய்திருந்த மனு மீதான வழக்கு 03-01-2013 மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த தெரிவுக் குழுவின் உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுமாறு அழைப்பாணை விடுத்திருந்தது.

இந்தநிலையில், ஜே வீ பியின் சார்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த விஜித ஹேரத் நாளைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஆளும் தரப்பு பிரதிநிதிகள் நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லை என அறிவித்துள்ளனர்.


2 comments:

Powered by Blogger.