Header Ads



எகிப்தில் ஹமாஸ், பதாஹ் பங்குகொள்ளும் முக்கிய பேச்சுவார்த்தை



(inneram)

புதன்கிழமை (09/01/2013) எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் மிக முக்கியமான முத்தரப்பு அரசியல் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 

ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷைல், பலஸ்தீன் அதிகாரசபைத் தலைவரும் ஃபத்தாஹ் கட்சித் தலைவருமான மஹ்மூத் அப்பாஸ் ஆகிய இருவர் தலைமையிலான பலஸ்தீன் அரசியல் பிரமுகர்கள் குழுவொன்று எகிப்திய அதிபர் முஹம்மத் முர்ஸியைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளது.

மேற்படி செய்தியைத் தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹமாஸின் அரசியல் பிரிவுப் பிரதித் தலைவர் கலாநிதி மூஸா அபூ மர்ஸூக், "பலஸ்தீனில் நிலவிவரும் உள்ளக முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் காத்திரமான முயற்சிகளில் நமது எகிப்திய சகோதரர்கள் முழு முனைப்போடு ஈடுபடுவார்கள் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பும் கலந்துரையாடலும் பலஸ்தீன் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comment:

  1. பாலஸ்தீன் நாட்டின் எதிர்கால நலன் கருதி ,ஹமாஸ் ,அல்பாதாஹ் தலைமைத்துவங்கள் எதிப்தில் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்

    ReplyDelete

Powered by Blogger.