Header Ads



அமெரிக்க, இஸ்ரேல் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அப்துல் கலாம்..!



அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் போல மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம் கொள்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை வழங்கியுள்ளார். இந்திய உளவு அமைப்பான "ரா" சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டு மக்களை காப்பாற்ற, பயங்கரவாதிகளுக்கு எதிரான அவர்களது தாக்குதல் சிறப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் வெளிநாடுகளிலும் கூட இரு நாடுகளும் சேர்ந்து தாக்குதலை நடத்துகின்றன. மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம் என்ற அந்த நாடுகளின் கொள்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


2 comments:

  1. ஒன்னை என்னமோ நினைச்சோம் ...அப்படின்னா ....அவனா நீ? போடா பன்னாட...

    ReplyDelete
  2. உலகிலேயே மிகப் பெரும் பயங்கரவாதி அமெரிக்காவும் இஸ்ரேலும் என்பது கூட இந்த கலாம் அய்யாவுக்கு புரியாதது வேக்கக்கேடுதான்...!
    பெரிய அறிவாளி என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்கும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் எச்சில் தண்ணியை ருசிப்பதில் ஒரு சுகம்தான்...!

    பாவம் அப்பாவி கலாம் அய்யா...!

    ReplyDelete

Powered by Blogger.