Header Ads



நான் முஸ்லிம் என்பதால் மிரட்டப்பட்டு, இந்தியனாக இருந்த போதும் வேறுபடுத்தப்படுகிறேன் - ஷாருக் கான்


பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் மிரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார்.

பாக். வாருங்கள்: ஹபீஸ் சயீத்

இதை அறிந்த, பாக்.போராளி தலைவர் ஹபீஸ் முகமது சயீத், ஷாருக்கானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணர்ந்தால், பாகிஸ்தான் வரலாம்; உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்கிறோம். உங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படும். ஷாருக்கிற்கு, பாகிஸ்தான் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றார்.

பாதுகாப்பு கொடுங்கள்: ரஹ்மான் மாலிக்

இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்தார். அவர் கூறியதாவது,

ஷாருக்கானை முஸ்லிம் என பார்க்க வேண்டாம். ஷாருக்கான், இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகர். அவரை வேறுபடுத்தி பார்க்க‌ வேண்டாம். அவருக்கு பிரச்னை என்றால், இந்தியா உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் நேசிக்கப்படும் நடிகர். இதுநாள் வரை அவரை மிரட்டியவர்கள், எதிராக செயல்படுபவர்கள் , அதனை விலக்கிக்கொள்ளுங்கள், ஷாருக்க‌ானை ஒற்றுமையின் சின்னமாக , இந்திய சகோதர, சகோதரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு ரஹ்மான்மாலிக் கூறினார்.


3 comments:

  1. நீ இஸ்லாத்தை கேவலபடுத்தும் முஸ்லிம் வேடதாரி நீ எதை கேவலபடுத்த உன் வேடத்தை பாவிக்கிறாயோ அதனால் உன்னால் உலகத்தின் அளவு பொருளாதாரம் சம்பாதிதாலும் உன்னால் குடிசையில் இருப்பவனின் மன நிம்மதி சந்தோசம் ராகத்தை கூட அடைய முடியாது உன் நிலை உலகிட்கே எடுத்துகாட்டு எதனை நாம் வரம்பு மீறுவதால் இழிவடைய செய்ய நாடுவோமோ அது மகத்தானதாக இருப்பின் அதனால் நாம் என்ன நிலையில் இருந்தாலும் அச்சமற்று இருக்கவே மாட்டோம் என்பதட்கு

    ReplyDelete
  2. நீங்கள் எந்த நாட்டுக்குள் நுழைவதானாலும் முதலில் இஸ்லாத்தினுள் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள். பெயர் மட்டும் இஸ்லாமாகி சரிவராது அது சினிமா ரசிகர்களைக் குசிப்படுத்தலாம். ஆனால் இறைவனை சென்றடையும் வழியையும் தகுதியையும் முதலில் தேடுங்கள் .உலகம் உங்களின் காலடியில் மண்டியிடும்.

    ReplyDelete
  3. Hi Friends,

    நமது பெரும்பாலான இளைஞர்கள் தொடர்பாக இருக்கும் வியப்பான விடயம் என்னவென்றால் ஒரு நடிகனின் திரைப்படத்தையோ பாடலையோ இசையையோ நடனத்தையோ வாயினால் ஜொள்ளு ஒழுக இரசிப்பார்கள்.

    ஆனால் அந்த துறைகளிலே ஈடுபட்டிருப்பவர்கள் நம்மவர்கள் என்று தெரிந்து விட்டால் மட்டும் உடனே பக்திப் பழமாகி அவர்களது தொழிலை விமர்சிக்கத் தொடங்கி விடுவார்கள்.

    எனது வினா இதுதான்:

    நம்மவர்கள் சினிமா போன்ற துறைகளிலே ஈடுபடக்கூடாது என்பதுதான் உங்களது உள்ளார்ந்த விருப்பம் என்றால் நீங்களும் அவர்கள் ஈடுபட்டிருக்கும் துறைசார்ந்த கேளிக்கை வினோதங்களை இரசிக்கக்கூடாது.

    இந்த உதாரணம் சற்று காரமாக இருந்தாலும் பரவாயில்லை, கேளுங்கள்:

    நீங்கள் பன்றிக்கறியை சுவைத்துத் தின்று கொண்டு இறைச்சிக்கடையிலே பன்றியை உரிப்பவனையும் பன்றிக் கறி வெட்டுபவனையும் "அப்படிச் செய்யாதே!" என்பதைப் போலிருக்கின்றது நீங்கள் செய்யும் விடயம்.

    நீங்கள் ஷாரூக்கான்களையும் ஏ.ஆர். ரஹ்மான்களையும் அன்றாடம் படங்களிலும் பாடல்களிலும் கொண்டாடிக் கொண்டே அவர்களை ஆன்மீகக் குன்றுகளாகவும் வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் அன்பர்களே?

    பதில்கூற முடியாத போதெல்லாம் வழமைபோல என்மீது சேற்றை வாரியடிக்காமல் சிந்தித்து பதில் கூறுங்கள் நண்பர்களே?

    ReplyDelete

Powered by Blogger.