ஜனாதிபதி மஹிந்தவும் பௌத்த இனவாதம் பேசுகிறாரா..?
பௌத்த மதத்தைச் சாராதோர், பௌத்த மதத்தவரின் காணிகளைப் பயன்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பௌத்த மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பௌத்த மதக் காணிகளில் ஏனைய மதத்தவர்கள் தங்களது வழிபாடுகளை பெரும்பாலும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடைகளை வழங்குமாறு பௌத்த மதக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தினால், பௌத்த பிக்குகள் ஏனைய மதத்தவர்களுக்கு இந்தக் காணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.பௌத்தர்கள் என்ற ரீதியில் எந்த சந்தர்ப்பத்திலும் தான தருமங்களை செய்யத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹா சங்கத்தினரும், அனைத்து பௌத்தர்களும் இனவாத கோட்பாடுகளை வெறுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மதவழிபாட்டுத் தளங்களுக்காக தான தருமங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரக் காரணிகளுக்காக மக்கள் தங்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேறிச் சென்றிருப்பதனால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். gtn
Post a Comment