ஆண்களின் உடல் நலம் குறித்த ஆய்வு
பிரிட்டனில் வசிக்கும் ஆண்கள், வாரத்தில், ஆறு முறை மட்டுமே முகத்தை கழுவுகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டினில் வசிக்கும் ஆண் மற்றும் பெண்களிடம் அவர்களது உடல் நலம் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், ஆண்கள் வாரத்திற்கு ஆறு முறை மட்டுமே, முகத்தை கழுவி வருகின்றனர். அதற்கு கூட, ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. ஆனால், இவர்கள், வாட்டசாட்டமான உடல்வாகு பெற, வாரத்திற்கு மூன்று மணி நேரம் செலவிடுகின்றனர்.பிரிட்டனில், 83 சதவீத ஆண்கள், தங்களது தோல் பிரச்னைகள் குறித்து கவலைப்படுகின்றனர். அதாவது, முக ஷவர ரேசரால் ஏற்படும் காயங்கள், சொறிதல், வறண்ட தோல் மற்றும் சுருக்கம் போன்றவை தான், அவர்களது பிரச்னைகளாக உள்ளன. மேலும், 42 சதவீத ஆண்கள், அதிக உடல் எடை குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
Post a Comment