Header Ads



வளப்பற்றாக்குறைவினால் பின்னடைந்து செல்லும் கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயம்



(எஸ். எச். எம். வாஜித்)

கற்பிட்டி கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயம் 1996.03.11 ஆம் ஆண்டு ஜனாப் எம். கே. றயுஸ்தீன் என்பவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரைக்கும் இயங்கிக்கொண்டு வருகின்றது.

இவ் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் மிளிர்கின்றார்கள். இன்னும் இம்மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் பல பரிசில்களை பெற்றுவருகின்றனர்.

கடந்த சில வருடங்களிற்கு முன்பு வடமாகாண அமைச்சினால் ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் இப்பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். எனினும் இவ் நியமனங்களை பெற்றுக்கொண்ட ஆசிரியர்களை மீண்டும் வடமாகாணத்தில் பணியாற்றுமாறு வடமாகாண கல்வி அமைச்சினால் சுற்றுநிருபனத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுவருகின்ற ஏறத்தாள 600 மாணவர்களுக்கு 10 பேர்களைக்கொண்ட ஆசிரியர் குலாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதி அதிபர் ஜனாப் எம். கே. றயுஸ்தீன் அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் பாடசாலை கட்டிடத்தின் கம்பிகள் துருப்பிடித்துள்ளதாகவும் மலசல கூடம் குடிநீர் கிணறுகள் பாழடைந்துள்ளதாகவும் போதியளவான ஆசியரியர்கள் இன்மையாலும் இன்னும் பல போதியளவான வளங்கள் இன்மையாலும் இப்பாடசாலையை நடாத்திச்செல்வதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் இப்பிரச்சினைகளை உரியவர்கள் நடவடிக்கை எடுத்து தீர்த்து தருமாறு வேண்டிக்கொண்டார்.








No comments

Powered by Blogger.