Header Ads



பொலனறுவையில் கிணற்று நீருடன் திரவம்


பொலன்னறுவை - லங்காபுர - வீரபுர பிரதேசத்தில் வீடொன்றில் பயன்படுததப்பட்டு வரும் குழாய் கிணற்றிலிருந்து எண்ணெய் போன்ற வன் திரவம் ஒன்று வெளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 அடி ஆழத்தைக் கொண்ட குறித்த குழாய் கிணற்றிலிருந்த கடந்த ஒரு வார காலமாக எண்ணெய் கலந்த நீர் வெளியேறி வருவதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீரை பாத்திரத்தை இடும் போது எண்ணெய் படை நீரின் மீது படர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த லங்காபுர பிரதேச செயலாளர் ஆர்.எம்.கே.ஜயதிலக்க, எண்ணெய் அடங்கிய நீர் மாதிரியை ஆய்வுக்காக பெற்றுச் சென்றுள்ளார்.

No comments

Powered by Blogger.