Header Ads



தேசிய சுதந்திர ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்


(மன்சூர்)

தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் ஒன்றுகூடல் நாளை(12.01.2013) காலை 10.00 மணிக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலுள்ள கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் எம்.எஸ்.எம்.ஜஃபர் மற்றும் செயலாளர் ஐ.எச்.ஏ. வஹாப் ஆகியோர் ஒப்பமிட்டு ஊடகவியலாளர்களுக்கும், அதன் அங்கத்தவர்களுக்கும் அழைப்பு கடிதங்களை அனுப்பியுள்ளனர். நாட்டின் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகவியலாளர்களின் எதிர்காலத் திட்டங்கள், மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு விடயங்கள் இவ்வொன்றுகூடலின்போது கலந்துரையாடவிருப்பதாக  அவ் அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் பங்குபற்றவென அம்பாரை மாவட்டத்திலுள்ள குறிப்பிட்டளவு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் ஐ.எச்.ஏ. வஹாப் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.