எகிப்தில் ஜனாதிபதி முர்ஸி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் (வீடியோ)
எகிப்தில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கால்பந்து விளையாட்டுப்போட்டியின் போது கலவரம் மூண்டது. இதில் ரசிகர்கள் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை போர்ட் செயித் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பில் 21 பேர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக தலைநகர் கெய்ரோ உள்பட 4 நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அது கலவரமாக மாறியது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 4 வது நாளாக தலைநகர் கெய்ரோ தாரிர் சதுக்கத்திலும் போராட்டக்காரர்கள், அரசுப்படையினருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போர்ட் செயித், சூயெஸ் மற்றும் இஸ்மாலியா நகரங்களில் அவசர நிலைப்பிரகடனத்தை அதிபர் மொர்சி அறிவித்துள்ளார்.
Post a Comment