Header Ads



கண்டி ஜம்மியத்துல் உலமா சபை ஏற்பாட்டில் நோயாளர்களுக்கு காலை உணவு (படங்கள்)



(ஜே.எம்.ஹபீஸ்)

உளவியல் நலக்குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படக்கூடிய ஒரு குறைபாடான போதும் மருந்தினால் மட்டும் அதைக் குணப்படுத்த முடியாது என்று கண்டி வைத்திய சாலையின் உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுசில் சிரிவர்தன தெரிவித்தார்.

ஜனவரி முதலாம் திகதி சகல அரச காரியாலங்களிலும் தனியார் நிறுவனங்கள் பலவற்றிறிலும் இன்று ஆங்கில புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அதில் ஒன்றாக கண்டி வைத்தியசாலையில் கண்டி ஜம்மியத்துல் உலமா சபையினரும் ஒரு வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அதில் உரையாற்ம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கண்டி வைத்திய சலையில் உள்ள 39,40ம் இலக்க விடுதிகளைச் சேர்ந்த நோயாளர்களுக்கு இன்றிலிருந்து தினம் தோரும் காலை 10 மணிக்கு சிற்றுண்டி ஒன்றை வழங்குவதற்காகன ஆரம்ப நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

முன்பு ஒருகாலத்தில் சயரோகம ஒரு பயங்கர வியாதியாகக் காணப்பட்டு அன்று சகல அமைப்புக்களும் அவர்களுக்கே உதவிகளைச் செய்து வந்தன.

இன்று சிறுநீரக சிகிட்சைப் பிரிவு, புற்று நோய் சிகிட்சைப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு என்பவற்றிற்கே பொது மக்கள் அதிக கவனம் வெலுத்து கின்றனர். இதன் காரணமாக பலகோடி ரூபாய்களில் சிறு நீரகப் பிரிவு மற்றும், கண்நோய் பிரிவு என்பன பொது மக்கள் உதவி மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.  கண்டி புற்று நோய்ப்பிரிவு மட்டும் பொது மக்களது 80 கோடி ரூபாய் அன்பளிப்புக்கள் மூலம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆனால் சமுகத்தில் பொதுவாக அதிகமானோரைப் பாதிக்கும் உள நோய் பற்றி பலர் அறியாhதன் காரணத்தால் சுமார் 150 வருடம் பழைமையான  பிரத்தானியர் காலத்துக் கட்டிம் ஒன்றிலே இப்பிரிவு இயங்குகிறது. எனவே பொது மக்கள் இது விடயமமாக தெளிவு பெறவேண்டும். இங்கு விடுதிகளில் தங்கி சுமார் 200 பேர்வரை ஆண்களும் பெண்களும் சிகிட்சை பெறுகின்றனர். வெளி நோயாளர் பிரிவையும் சேர்த்தால் மொத்தம் 2500 ற்கு மேற்பட்டவர்கள் சிகிட்சை பெறுகின்றனர். 

வெறுமனே மருந்தினால் மட்டும் குணப்படுத்த முடியாத உளக்குறைபாடுகளுக்கு சமூகநலத் துறையும், உளத் திருப்தி ஏற்படுத்தக் கூடிய சிகிட்சைகளும் தேவை. இதனை அரசினால் முழுமையாக மேற்கொள்ள முடியாது.

உதாரணமாக போதைக்கு அடிமையானவர்கள் வைத்திய சிகிட்சை பெறும் காலங்களில் முற்பகல் 10 மணிக்கு பசியுணர்வு ஏற்படும். உண்ட பின்னர் அவர்களுக்கு  ஓய்வு தேவைப்படும் இவை இரண்டையும் மேற்கொள்ள பொதுமக்கள் உதவி தேவை. எனவே கண்டி உலமா சபை தொடர்ந்து முற்பகல் உணவை வழங்க எடுத்துள்ள இம் முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. எனவே இதற்கு உதவி செய்ய முன்வந்துள்ள கண்டி நகர முஸ்லிம் வர்த்தகர்களையும் கண்டி உலமா சபையையும் மனமாரப் பாராட்டுகிறேன் என்றார்.












No comments

Powered by Blogger.