இந்தியாவின் நிபந்தனை - பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா..?
இந்திய வீரரின் தலையை துண்டித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், இந்திய வீரர்கள் 2 பேரை கொன்றனர். அதில் ஒருவரின் தலையை தனியாக துண்டித்து எடுத்து சென்றனர். இந்த விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அமைதிப் பேச்சு நடத்த இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி அழைப்பு விடுத்தார். இதற்கு பதில் அளித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி கூறியதாவது: இந்திய வீரர்களின் தலையை துண்டித்தவர்கள் மீது பாகிஸ்தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் பின்னர்தான் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். பாகிஸ்தானுடன் இனி சுமூக உறவு கிடையாது என்று பிரதமரும் எச்சரித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். அமைதியை விரும்பினால் பாகிஸ்தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆனால் இந்தியாவின் நிபந்தனை குறித்து பாகிஸ்தான் இதுவரையில் பதில் எதையும் தெரிவிக்கவில்லை.
Post a Comment