Header Ads



இலங்கை அரச சார்பு இணையங்கள் மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல்கள்..!


இலங்கை அரசின் பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம்மிக்க இணையத்தளங்களை முடக்கும் போர் தீவிரமடைந்துள்ளது. 

அரச இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மறைமுகப்போரின் ஒரு கட்டமாக, இலங்கை முதலீட்டுச் சபையின் இணையத்தளம் இன்று 25-01-2013 முடக்கப்பட்டுள்ளது.  டவி ஜோன்ஸ் என்ற ஊடுருவல்காரரால், இலங்கை அரசின் இணையத்தளங்களை முடக்கும் போர் நடத்தப்பட்டு வருகிறது. 

முதலீட்டுச்சபையின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 2000 இற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் விபரம் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட அனைத்துமே ஊடுருவல்காரரால், இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

சிறிலங்காவில் முதலீடு செய்ய விரும்பும் எவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும், ஏனென்றால் தானே தற்போது முதலீட்டுத் தரவுகளை கையாள்வதாகவும் இணையத்தளத்தை முடங்கியவர் அதில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் டவி ஜோன்ஸ் எனப்படும் இணைய ஊடுருவல்காரரால், தாமரைத் தடாகம் அரங்கின் இணையமும் முடங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,கடந்த செவ்வாய்க்கிழமை டவி ஜோன்ஸ் இணைய ஊடுருவல்காரரால் இலங்கை துறைமுக அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ரூபவாஹினி தொலைக்காட்சி உள்ளிட்ட இரண்டு அரச தொலைக்காட்சிகளினதும் இணையத்தளங்களும் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையத்தின் இணையத்தளம் ஊடுருவல்காரரால் முடக்கப்பட்டது தெரிந்ததே. 

அதன் பின்னர் அடுத்தடுத்து இலங்கை அரசின் முக்கிய இணையத்தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் சைபர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. Behing this incidence LTTE terror supporters group standing!

    ReplyDelete

Powered by Blogger.