மாலியில் ஆக்கிரமிப்பு பிரான்ஸ் இராணுவ தாக்குதல் - அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை
(Ernst Wolff and Alex Lantier)
பிரெஞ்சு விமான மற்றும் தரைப்படை துருப்புக்கள் வடக்கு மாலியில் இஸ்லாமியவாத எதிர்த்தரப்புப் படைகளை வெள்ளியன்றும் வார இறுதியிலும் தாக்கியது; இன்னும் நூற்றுக்கணக்கான பிரெஞ்சுத் துருப்புக்கள் மாலித் தலைநகரான பமாக்கோவில் இறங்கின.
பாராளுமன்றத்தையும் கலந்தாலோசிக்காமல் -இன்று பாராளுமன்றம் இப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளும்- பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மாலியுடன் காலவரையற்ற போரை அறிவித்தார்; மேம்போக்காக இது மாலி அரசாங்கம் எழுச்சியாளர்கள் மத்தியில் இருக்கும் அல் குவேடா பிணைப்பு கொண்ட படைகளுடன் போராட உதவுவதற்காக எனக் கூறப்பட்டது. இப்போர் “அவசியமானவரை நீடிக்கும்” என்றார் அவர்.
இஸ்லாமியவாத அன்சார் டைன் போராளிக் குழு செவரேக்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய மாலி அரசாங்க விமான நிலையத்தை தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளது, இது வடக்கு மாலியின் எந்த இராணுவ தலையீட்டுக்கும் முக்கியமாக கருதப்படுகிறது. இப் போராளிக் குழு கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் வடக்கு மாலியின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுள்ளது. லிபியாவில் நேட்டோ நடத்திய போரில் இருந்து விலகிய துரெக் படைகள், ஒரு வலுவற்ற, பிளவுற்ற மாலி அரசாங்கப் படைகளை நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றின. பல மாதங்கள் பிரான்ஸும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் மாலியின் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டிருந்தன.
வியாழன் அன்று எழுச்சியாளர்கள் அரசாங்கப் படைகளுடனான கடுமையான போருக்குப் பின் கொன்னா கிராமத்தை கைப்பற்றினர். பதிலடி கொடுக்கும் வகையில் பிரெஞ்சுப் படைகள் வெள்ளியன்று கொன்னாவைத் தாக்கிக் கிட்டத்தட்ட 100 பேரைக் கொன்றன. ஒரு சிறிய ரக ஆயுத தாக்குதலில் பிரெஞ்சு ஹெலிகாப்டர் விமானியும், பிரெஞ்சுடன் சேர்ந்து போரிட்ட11 மாலி நாட்டுப் படையினர்களும் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. பிரான்ஸின் பாதுகாப்பு மந்திரி JeanYves Le Drian இஸ்லாமியவாதிகள் கொன்னாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர், ஆனால் அப்பகுதியில் “தீவிரப் போருக்குப் பின்னும்” தொடர்ந்து இருந்தனர் என்றார்.
அன்சார் டைன் செய்தித் தொடர்பாளர் சாண்ட ஔல்ட், அல் ஜசிராவிடம் கூறினார்: “பயங்கரவாத பிரெஞ்சு இராணுவம் கொன்னாவைத் தாக்கியது. மருத்துவமனைகள் இப்பொழுது பெண்கள், குழந்தைகள், முதியோர் என முக்கியமாக பாதிக்கப்பட்ட, காயமுற்றவர்களால் நிறைந்துள்ளன. எத்தனை பேர் இறந்துவிட்டனர் என்பதை அறிவது கடினம்; ஆனால் எண்ணிக்கை மிகப் பெரியதாகும். நம் வீரர்களில் ஐந்துபேர்தான் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் நிரபராதியான குடிமக்கள்; வேறுபாடில்லாமல் பிரெஞ்சு விமானப் படைகளால் பொறுப்பற்ற முறையில் கொல்லப்பட்டனர்”.
அல் குவேடாவுடன் தன் அமைப்பு பிணைப்புக் கொண்டுள்ளது என்பதை மறுத்த பௌவமனா, “மாலி, இப் பிராந்தியத்தின் ஆப்கானிஸ்தானாக விளங்கி, பிரான்சின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.”
வார இறுதியிலும் வான் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஞாயின்று அல்ஜீரியா, இப்பிராந்தியத்தில் இராணுவத் தலையீட்டிற்குத் தன் மரபார்ந்த எதிர்ப்பை கைவிட்டு பிரான்சிற்கு தன் வான் பகுதியைப் பயன்படுத்தி மாலியில் இலக்குகளை அடைய அனுமதி கொடுத்தது. இது பிரான்சில் நிறுத்தப்பட்டிருந்த ஜெட்டுக்களின் மூலம் பிரான்ஸ் தன் வான் தாக்குதல்களைத் தொடக்க வைத்தது. பிரெஞ்சு விமானங்கள் மாலியில் இருக்கும் தளங்களில் இருந்தும் செயல்பட்டன; அண்டை நாடான சாட்டிலிருந்தும் செயல்பட்டன.
ஞாயிறன்று பிரெஞ்சு ஜெட்டுக்கள் எதிர்தரப்பின் விநியோக கிடங்குகள் மற்றும் தளங்கள் என இருக்கும் வடக்கு நகரங்களான காவோ, கிடல் ஆகியவற்றைத் தாக்கின. போராளிக் குழுக்களுக்கு விரோதப் போக்கு காட்டும் காவோவில் இருக்கும் மாலி அதிகாரி ஒருவர் நியூ யோர்க் டைம்ஸிடம், “காவோ மருத்துவமனை நிரம்பி வழிகிறது. நகரத்தில் இருக்கும் இரு சவக்கிடங்குகளும் சடலங்களால் நிறைந்துள்ளன” என்றார்.
அடிக்கடி இராணுவச் சதி ஆட்சி மாற்றம் நடக்கும் மாலி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முறையாக நடத்தப்பட்டாலும், பிரான்ஸ் மாலி மீது படையெடுத்திருப்பது, ஒரு ஏகாதிபத்திய கொள்ளையடிப்புச் செயல் ஆகும். இழிந்த பொய்களின் மூலம் மாலி மற்றும் பிரெஞ்சு மக்களிடையே நியாயப்படுத்தப்பட்டுள்ள இப்போர் ஓர் உள்நாட்டுப்போருக்கு எரியூட்டும். அது ஏற்கனவே 300,000 மாலி மக்களை அகதிகளாக மாற்றியுற்றது, சகெல் முழுவதையும் எரிய வைத்துள்ளது.
மாலியின் மீது பிரெஞ்சுக் குண்டுகள் பொழிந்தபோது, ஹாலண்ட் வடக்கு எழுச்சியினருக்கு நடுவே இருக்கும் “பயங்கரவாதக் கூறுகளின் ஆக்கிரோஷத்தை” நாடு எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார். “தன்னுடைய அடிப்படை நலன்கள் என்று இல்லாமல் மாலி மக்களுடைய உரிமைகள் என்று வரும்போது பிரான்ஸ் எப்பொழுதும் அங்கு வரும் என்பதைப் பயங்கரவாதிகள் அறிய வேண்டும்; மாலி மக்கள் சுதந்திரமாக, ஜனநாயக முறையில் வாழ விரும்புகின்றனர்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
பிரான்ஸ் அல் குவேடாவிற்கு எதிரான ஜனநாயகத்தைக் காக்க விரைகிறது என்னும் போலித்தனம், தன்னுடைய “அடிப்படை நலன்களைக் கூட துறந்து வருகிறது” எனக் கூறப்படுவது ஒரு அபத்தமான பொய் ஆகும். முதலில் பிரெஞ்சு அராங்கம் ஒன்றும் அல் குவேடாவிற்கு எதிராக கொள்கை ரீதியான எந்த எதிர்ப்பையும் கொண்டிருக்கவில்லை. லிபிய ஜிஹாதிஸ்ட் படைகள், பாரிஸ் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுக்கு 2011 லிபியப் போரின்போது முயம்மர் கடாபியை அகற்றுவதற்கு உதவின. பாரிஸ் இப்பொழுதும் அல்குவேடா பிணைப்புடைய அல் நுஸ்ரா முன்னணியை சிரியாவிவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான பினாமி போருக்கு நம்பியுள்ளது.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மாலியில் அதன் போரை நடத்துவது அதன் அடிப்படை நலன்களுடன் இசைந்த வகையில்தான். 1892ல் இருந்து 1960 வரை பிரெஞ்சு காலனித்துவ நாடாக இருந்த மாலி மேற்கு ஆபிரிக்காவில் மையப்பகுதியில் உள்ளது; இது மூலவளங்கள் அதிகம் உள்ள பகுதி; ஒருகாலத்தில் பிரெஞ்சு காலனித்துவப் பேரரசின் இதயத்தானமாக இருந்தது.
பிரான்சின் அணுச்சக்தி நிறுவனம் அரேவா ஏற்கனவே 100,000 டன்கள் யுரேனியத்தை 1968ல் அண்டையில் இருக்கும் நைஜரில் இருந்து எடுத்துள்ளது; உலகிலேயே இரண்டாம் மிகப் பெரிய யுரேனியச் சுரங்கத்தை அங்கு 2014ல் திறக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது. இப்போரை பயன்படுத்தி ஹாலண்ட் அரசாங்கம் அல்ஜீரிய ஆட்சியுடன் நெருக்கமான பிணைப்புக்களை நிறுவ விரும்புகிறது; அங்கு மகத்தான இயற்கை எரிவாயு இருப்புக்கள் உள்ளன. பிரெஞ்சுப் படைகள செனேகல், பர்கினா பாசா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியவற்றிலும் நிலைப்பாடு கொண்டுள்ளன. இந்நாடுகள் அனைத்தும் முன்னாள் பிரெஞ்சுக் காலனித்துவங்களாகும்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நேட்டோ நாடுகளுடன் பிரான்ஸ் இணைந்து செயல்பட்டு, மாலியில் ஒரு பரந்த தலையீட்டிற்குத் திட்டமிட்டுள்ளது; இதற்குப் பல மேற்கு ஆபிரிக்க கைக்கூலி ஆட்சிகள் தரைப்படைகளைக் கொடுத்து உதவும். ஐ.நாவின் தலைமைச் செயலர் பான் கீ-மூன் செனேகல் மற்றும் நைஜீரியா ஆகியவை ஏற்கனவே மாலியில் உதவுவதற்குப் படைகளை அனுப்பியுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். பர்கினா, பாசோவின் வெளியுறவு மந்திரி தன் நாடு 500 துருப்புக்களை அடுத்த இரண்டு நாட்களில் பாராளுமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து அனுப்பும் என்று அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று மேற்கு ஆபிரிக்க அரசுகளின் பொருளாதார சமூகத்தின் (Economic Community of West African States -ECOWAS) பிரதிநிதி ஒருவர் அந்த அமைப்பு மாலிக்கு இன்று துருப்புக்களை அனுப்பும் என்று அறிவித்தார். ECOWAS இன் தற்போதைய சுற்றுமுறைத் தலைவர் ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி அலஸ்ஸனே ஔட்டரா ஆவார்; ஒரு பிரெஞ்சு ஆதரவு கொண்டிருந் இராணுவ நடவடிக்கை மூலம் ஏப்ரல் மாதம் 2011ல் பூசல் நிறைந்த தேர்தல்களுக்குப் பின் இவர் அதிகாரத்தில் இருத்தப்பட்டார்.
பிரான்சில் வலதுசாரிக் கட்சிகள், மாலியில் போருக்குப் பின்னே நிற்கின்றன. கோலிச UMP உடைய செய்தித் தொடர்பாளர் Jean-François Copé ஹாலண்டிற்குத் தன் “ஆதரவை” உறுதியளித்துள்ளார்.
பிரான்சின் நவ-பாசிசத் தலைவர் மரின் லு பென், ஹாலண்டின் போரை “முறையானது” எனப் பாராட்டி மேலும் கூறினார்: “நம் நாடு மாலியின் முறையான அரசாங்கத்திற்கு உதவ அழைக்கப்பட்டுள்ளது; இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு இணங்க இது உள்ளது; அதுவும் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில்.”
ஹாலண்டின் சோசலிசக் கட்சி அராசாங்கம் தொடக்கியுள்ள முதல் பிரதான போர் மாலிமீதான போர் ஆகும். இது PCF எனப்படும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற குட்டி முதலாளித்துவ “இடது” சக்திகளின் பங்கை பேரழிவு தரும் வகையில் அம்பலப்படுத்தியுள்ளது; இவைதான் ஹாலண்டிற்கு நிபந்தனயற்ற முறையில் வாக்களிக்குமாறு ஜனாதிபதித் தேர்தலில் கேட்டுக் கொண்டன.
மாலியில் தலையீடு என்பது, உள்நாட்டில் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் மீதான அவருடைய தீய தாக்குதல்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முக்கியமான நோக்கத்திற்கு ஹாலண்டிற்கு உதவுகிறது. மாலி மீதான தாக்குதல் தொடங்கிய சில மணி நேரத்திற்குள், ஹாலண்ட் அரசாங்கம் இன்றுவரை காணப்படாத பெரும் தொலை விளைவுகள் உடைய “தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தத்தை” அறிவித்துள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தொழிற்சங்கங்களுடன் பேச்சுக்களுக்குப் பின் வந்துள்ள இந்த நடவடிக்கைகள், மெடப் என்னும் முதலாளிகள் சங்கத்தால் “நாடு அதன் போட்டித்தன்மையை மீண்டும் பெறுவதற்கு உதவும்” என உடனே பாராட்டப்பட்டன.
பிரான்ஸ் அதன் மாலிப்போரில் நேட்டோ நட்பு நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது. அமெரிக்க ஆபிரிக்கக் கட்டுப்பாட்டின் தலைவரான ஜெனரல் கார்ட்டர் ஹாம் பென்டகன் பரந்த விருப்பத் தேர்வுகளை, “பிரெஞ்சு முயற்சிக்கு ஆதரவு கொடுக்க” ஆராய்ந்து வருகிறது என்றார். இதில் உளவுத்துறைத் தகவல்கள் பகிர்ந்து கொள்வது, தளவாடங்கள் நகர்த்துதல் ஆகியவை அடங்கும்; ஆனால் அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்படுவது பரிசீலிக்கப்படவில்லை. வாஷிங்டன், பிரான்ஸ் அமெரிக்க டிரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை ஆராய்வதாகவும் கோரியுள்ளது.
பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் காமெரோனுடைய அலுவலகம் AFP யிடம் தான் இரண்டு போக்குவரத்து விமானங்களை சிப்பாய்கள், கருவிகள் எடுத்துச்செல்ல அனுப்புவதாகவும், ஆனால் பிரித்தானியத் துருப்புக்கள் களத்தில் இறக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.
France /US/NATOபடைகள் கொன்றால் பொதுமக்களை கொன்றால் அவர்கள் தீவிரவாதி இதுக்கு UNHR ஒன்றும் சொல்லாதா?
ReplyDeletedear mulla , all your comments over various articles r correct and reasonable.unfortunately..... i think u know what. pls send me ur email to 009471 8107158
Delete