இலங்கையில் சீனர்களுக்காக சிறப்பு தேயிலை தயாரிப்பு
சீனர்களுக்கான சிறப்புத் தேயிலையை, சீனாவே இலங்கையில் உற்பத்தி செய்து கொள்ளவுள்ளது. கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச்சபை அனுமதி அளித்துள்ளது.
எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சீனாவின் யுன்னான் டியன்ஹொங் குழுமத்தைச் சேர்ந்த யென்ஹொங் அனைத்துலக நிறுவனம் இந்த சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்யவுள்ளது.
இந்த கூட்டுமுயற்சி நிறுவனம், உயர்தரம் வாய்ந்த சீன சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்து, சீன சந்தைக்கு அவற்றை ஏற்றுமதி செய்யவுள்ளது.
சீன சிறப்புத் தேயிலை, எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் மலையகத் தோட்டங்களில் பயிரிடப்படவுள்ளது.
இந்தக் கூட்டுமுயற்சி, இலங்கைக்கு கூடுதல், வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதாகவும், சீன சந்தைக்கு கூடுதல் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Post a Comment