Header Ads



ஜனாதிபதி மஹிந்த நியமிக்கும் புதிய நீதியரசரை ஏற்கவேண்டாம் - சட்டத்தரணிகள் கோரிக்கை


புதிய பிரதம நீதியரசரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் சிரேஸ்ட சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டால் அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கோரியுள்ளனர்.

புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டால் அது நீதிமன்றக் கட்டமைப்பையும் அதன் தீர்ப்பையும் அவமரியாதை செய்யும் வகையில் அமையும் என தெரிவித்துள்ளனர்.

 உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  
இதேவேளை உயர் நீதிமன்ற வளாகத்தில் கறுப்பு கொடி பறக்கவிடப்பட்டள்ளதுடன் சட்டத்தரணிகளும் வாயை கறுப்பு துணியினால் கட்டிக்கொண்டு நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருப்பதாகவும் , பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடாத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நீதிமன்ற வளாகத்தில் கறுப்பு கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. "சட்டம் தன் கடமையை செய்யும்"
    "இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்"

    ReplyDelete

Powered by Blogger.