Header Ads



நாட்டிய சலங்கைகளால் முஸ்லிம் சமூகம் விமோசனம் அடையப்போவதில்லை..!


faj அல்லாஹுவை புகழ்ந்தும் உயிரிலும் மேலான நேசத்துக்குரிய பெருமானார் மீதும் சலவாத்தும் சலாமும் சொன்னவனாய்! இஸ்லாமிய உறவுகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

"சத்தியம் வெல்லும் அசத்தியம் அழிந்து விடும் நிச்சயமாய் அசத்தியம் அழியக்கூடியதே,அநியாயகாரர்களுக்கும் மிகப்பெரிய அநியாயகாரன் அல்லாஹ்" என்ற அல்லாஹுவின் வார்த்தையை நினைவுகொண்டு சத்தியத்தை எடுத்துரைப்பதால் எதிரிகளின் ஆயுதங்களும் குண்டாந்தடிகளும் நமது உயிரை பறிக்கலாம் அல்லது அங்கங்களை துண்டாடலாம். ஆயினும் நமது ஏகத்துவ   பயணத்தில் அது சுகமானது என்ற நம்பிக்கை நாளை கற்பபைகளுக்குள் இருந்து வெளிவரும் சிசுக்களுக்கும் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹி என்ற புரட்சி குரலோடு ஏகத்துவ பயணத்தை தொடரும் பாதையாக அமையும் என்பது எனது நம்பிக்கையும் உங்கள் நம்பிக்கையுமாக இருக்கவேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் மீதான பகுதீக   உளவியல் வன்முறைகள் நாளுக்கு நாள் புதிய புதிய வடிவங்களாக திணிக்கப்படுகின்ற மட்ட ரகமான போக்கு காணப்படுகிறது. இதுவரைக்கும் நமது சமூகத்தின் பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களின் கருத்துக்கள் அடக்கி வாசிக்கபடுகின்ற ஊடக அறிக்கைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் பாத்திரம் பிச்சை பாத்திரமாக மாறிவிட்டது. பிச்சைகளால் நிரம்பிய பாத்திரத்தில் உரிமையை வாங்க இடமில்லை.

இன்று பாதுகாவலர்களை  திட்டுகின்ற போக்கு காணபடுகின்றது. திட்டுகின்றவர்கள்தான் சமூகத்தைப்பற்றி கவலைப்படுபவர்கள். ஆனால் குற்றம் பாதுகாவலர்கள்மீதல்ல. இஸ்லாத்தின் தளத்தில் இருந்து சிந்திக்காமல் ஏதோ ஒரு சலுகைக்காக சத்தியத்தை நிராகரித்து உலக ரசிகர்களையும் வன்முறையாளர்களையும் சமூகத்தின் காவலர்களாக அடையாளப்படுதியவர்களே இன்றைய நிலைக்கு பொறுப்புதாரிகள். காபிர்களின் நாட்டிய சலங்கைகளாக கால்களிலே அடிபணிந்து ஆடுகின்றவர்களால் ஒருபோதும் முஸ்லிம் சமூகம் விமோசனம் அடையப்போவதில்லை.

சியோனிச தொட்டிலில் தவழ்ந்து கொண்டு யதார்த்தத்தை விளங்காமல் சமூகம் பயணிக்குமானால் இறைவனும் காப்பாற்ற  போவதில்லை.கெட்டவர்களை அழிக்கும் பணியில் நல்லவர்களும் மரணிக்கும் நிலையும் தவிகர்க்கமுடியாதது. இஸ்லாமிய ஆன்மீகத்தை வறட்சியடைய செய்து இஸ்லாமிய சமூகத்தை பலவீனப்படுத்தும் சியோனிஸ கனவுகள் நிறைவேறி வருவதை   காணமுடிகிறது.

மேற்கத்திய நாகரிகத்தையும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளையும் சமநிலை படுத்துகின்ற போக்கை ஊடக தஜ்ஜால் செய்து வருகிறது. இதற்காய் தனது பொருளாதார விரிவாக்கத்தில் கவனம் செலுத்துகின்ற நிலையில் சமூக கூட்டுப்பொறுப்பும்,இஸ்லாத்தின் மீதான பற்றும் புறக்கணிக்கப்படுகிறது. 

இஸ்லாமிய சமூகம் தங்களை அறியாமலே உலகமயமாக்கல் தாகத்தினால் ஈமானிய எல்லையில் இருந்து பறந்து கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்கையில் அதிகபட்சம் மேற்கத்தய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இன்னும் சொல்லபோனால் சடவாத காதலர்களாக மனநோய் பிடித்து அலைகின்ற சமூகமாக மாறுகிறது.

இன்றைய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நமது கள நிலைமைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆக்ரோஷ வார்த்தை பிரயோக வடிவங்கள் பயனற்றவை. வற்றிக்கொண்டு செல்லும் ஆன்மீகம் நமது இருப்புக்களின் அடையாளத்தை அழித்துவிடும்.இப்போது இந்த சமூகம் விழித்துக்கொள்ள தவறுமானால்,நீண்ட தூக்கத்தின் பின் விழிக்கின்ற போது அது வன்முறையும் அடக்குமுறையும் நிறைந்த பூமியாக இருக்கும்.கிழக்கு மாகாண மக்கள் தாங்கள் நிலதொடருகளாலும் சனத்தொகை செறிவாலும் பாதுகாப்பாக இருக்கின்றோம் என எண்ணிக்கொண்டு இருப்பது பிரமையாகும். 

நிருவாக ரீதியான அடக்கு முறைக்கு திருகோண மலை மாவட்டம் முற்றாக உள்ளவாங்க பட்டுவிட்டது.அம்பாறை மாவட்டம் நகர்ந்து செல்கின்றது. இதுவே உண்மை நிலை.சிந்திப்பவர்களுக்கு புரியும்.இதை பற்றி பேசுவது இனவாதம் என்று தர்க்கம் புரியும் ஞான சூனியங்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும்.நில குறுக்கமும் விகிதாசார மாற்றல் பொறிமுறையும் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை உடைத்து அடிமைகளாக மாற்றிவிடும்.ஒவ்வொருவரும் மனசாட்சியுடன் சித்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.தவறும் பட்சத்தில் நமது தலைமுறைகளை நாம் வன்முறைகளத்தில் கைவிட்ட துரோகிகளாக மாறிவிடுவோம்.

வானத்தில் இருந்து பொழியும் மழைத்துளியில் நாம் படிப்பினை பெற வேண்டும்.ஒவ்வொரு துளியும் சிதறிகிடப்பதில் பயனில்லை ஆனால் அவை ஒன்று சேர்க்கப்பட்டு அணைக்கட்டு இடப்படுகின்ற  போதுதான் அதன் பெறுமானம் பூரணமடைகிறது. ஏகத்துவம் என்ற ஒத்த கருத்துடன் நெகிழ்வுதன்மை  கொண்ட ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும். ஆரோக்கியமான  சமூகம் உருவாகவேண்டும்.இன்னும் நமக்குள் வர்க்க வேறுபாடும்,பிரதேச வாதமும்,வறுமையும் தாண்டவமாடுகிறது.அவை களையப்பட வேண்டும் 

நம்மிடம் ஒரு தொலை பேசி இருக்கிறது. ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்  என்றால் முதலில் தொலைபேசி இலக்கம் தேவை.பிறகு இலக்கங்களை ஒவ்வொன்றாய் சரிபார்த்து அழுத்தவேண்டும்.அதன்பின்னே அழைப்பை ஏற்படுத்துகின்றோம். நிதானமின்றி தவறான இலக்கங்களால் குறித்த தொடர்பை ஏற்படுத்த முடியாது. இவ்வாறுதான் ஏகத்துவதுடன் நமது உரிமையை நிலை நாட்டும் பயணம் என்பது திட்டமிடலுடன் அவதானம் நிறைந்தது. மிகச்சரியாக இலக்கை நோக்கி நகரவேண்டும்.

இன்றைய சவாலுக்கு கருத்துரீதியான நகர்வுக்கு ஆங்கில சிங்கள மொழியிலான குறைந்த பட்சம் இலத்திரனியல் ஊடக பிரயோகம் மிக   அவசியமானது.    இன்னும் இஸ்லாமிய ஊடக புரட்சி மந்தமாகவே இருக்கிறது முஸ்லீம்கள்  இஸ்லாமிய ஊடகங்களுக்கு அனுசரணை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. நமது ஊடகத்தேவையின் இடைவெளிகளை இஸ்லாமிய கட்டமைப்பை செயலிழக்கச்செய்யும் மாற்று ஊடகங்கள் நிரப்புகின்றது. இது சமூக எழிர்ச்சிக்கு பாரிய இழப்பாகும்.இஸ்லாமிய செல்வந்தர்கள் இவாறான முயற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் ஆர்வம் இல்லை.

இறுதியாக,பிரார்த்தனைகளே மிகச்சிறந்த கேடயம் என்பதை இஸ்லாமிய போர் வரலாறுகளில் நபியவர்கள் காட்டியுள்ளார்கள். இலங்கை போன்ற நாடுகளில் நமது  உருக்கமான பிரார்த்தனை அவசியம். நாம் இருப்பது நிலதொடர்புகள் அற்ற தீவாகும் மிகச்சிறந்த பாதுகாப்பு அல்லாஹுவுடயது. இறுதி வரைக்கும் கலிமாவுடன் இன்ஷா அல்லாஹ் நமது சந்ததிகளும் இங்கேதான் வாழ வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

"நபி ஸல்லல்லாஹு அலை ஹி வஸல்லம்   அவர்கள் அல்லாஹுவுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்த பனு சுலைம் குலத்தாரை சேர்ந்த ரிஅல்,தக்வான் ,பனூ லிஹ்யான் ,பனூ உஸைய்யா  ஆகிய கிளையினருக்கு கேடு நேர நாற்பது நாள் காலை தொழுகை நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்" என ஸஹீஹ்  புகாரீ இல் பதிவாகி இருக்கிறது. 

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக நம்மில் எத்தனை பிரார்த்தனை புரிகின்றார்கள். ஒருவனுடைய  இருதயம் உலகவாழ்க்கையில் ஊனமாகி இருளடைகின்ற பொழுதுதான் உண்மையான ஏகத்துவ ஒளி பிறக்கிறது.  இருதயத்தில் சுவர்க்கம் தாகமாக மாறுகின்ற போதுதான்  அவன் புரட்சிக்கு தகுதியானவன். உங்களை நீங்கள் கேளுங்கள்.  

No comments

Powered by Blogger.