பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் கவனத்திற்கு..!
(MJM. Jaseem)
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஏனைய மத இனங்களோடு மிகவும் பிண்னிப்பிணைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல், நிர்வாகக் கட்டமைப்பு என்று அனைத்து துறைகளிதும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இந்நாட்டை விட்டு எவ்வகையிலும் பிரித்;து நோக்க முடியாத வகையில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது இன்னும் வாழ்ந்து வருகின்றது. ஆனால் அண்மைக்காலமாக இந்த இன உறவை அல்லது உணர்வை சீர்க்குலைப்பதற்கான கைங்கரியங்கள் இவ்வப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் தலைமைகளும் புத்தி ஜீவிகளும் சொல்வது போல மேற்படி காரியங்களை செய்வோர் பெரும்பான்மை இனத்தவர்களில் ஒரு சில பேர் வழிகளே, இப்படியான ஒரு கட்டத்திலே இந்த இன விரிசலை, முரண்பாட்டை தீர்ப்பதில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களது வகிபங்கு எவ்வாறு இருக்க வேண்டும்? அதற்கான முன்மொழிவுகள் என்ன? என்பன பற்றி ஆராய முயல்வோம்.
பல்கலைக்கழகம் எனும் போது அவை கல்வி, தேசிய அபிவிருத்தி, தனிநபர் தொழில் வாய்ப்பு என்ற இலக்குகளை அடைந்து கொள்வதற்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல. அதையும் தாண்டி அதன் நோக்கம் விசாலமானது, அலப்பெரியது. பல்கலைக்கழகம் அது நாட்டுக்கு நற்பிரiஐகளை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலை..., கலைகளையும் திறன்களையும் பட்டைத்தீட்டும் பட்டறை..., சிறந்த தலைமைகளையும் புத்தி ஐPவிகளையும் பிரசுவிக்கும் கருவறை..., பல்கலாச்சார பல்லின சமூகங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் நந்தவனம்...
பல்கலைக்கழகம் என்பது அது பிரட்சினைகள், முரண்பாடுகள், குரோதங்கள் தோற்றம் பெறக்கூடிய மையம் என்ற ஒரு தவறான சிந்தனைப்பாங்கு எம்மில் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் அதேநேரம் அது ஒரு இன ஒற்றுமைக்கான கேந்திர நிலையம் என்ற யதார்த்தத்தை எம்மில் பலர் சிந்திக்க தவறி விடுகின்றனர். புல்கலைக்கழக உள்ளக ரீதியிம் இன ஒற்றுமையை பலப்படுத்தும் போது, அது நாட்டில் தலைத்தோங்கியுள்ள இன முரண்பாட்டினை தணிப்பதற்கான ஆரம்ப படியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துவேஷ உணர்வுகளை ஏனையவர்களுக்கு தெளிவுபடுத்துவது எம் ஒவ்வொருர் மீதும் பொறுப்பாகும். ஓவ்வொரு முஸ்லிமும் தத்தமது மட்டத்தில் நின்று இதற்கான தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல், கல்வி என்ற ஏதோ ஓh மட்டங்களில் நாம் உள்ளடங்குவோம். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிற மத அரசியற் தலைவர்களுக்கு தெளிவு வழங்குவது அவர்களது பொறுப்பாகும். கல்வி மட்டத்திலிருக்கும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தமது மட்டத்தில் இருந்து கொண்டு பிற இன மாணவர்களுக்கு மத்தியில் தீர்வுத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வோர் பல்கலைக்கழகங்களிலுமுள்ள முஸ்லிம் மஐ;லிஸ் பொறுப்பாக இருந்து வழிநடாத்த வேண்டியது காலத்தின் தேவை. இதை விடுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும்; ஐம்மிய்யதுல் உலமா மாத்திரம் தான் தெளிவு படுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையாகும்.
இலங்கையில் மொத்தம் 14 பல்களைக்கழகங்களில் பல்லாயிரக்கணக்கான பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மாணவர்கள் கல்விகற்கிறார்கள். நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும், மூலைமுடுக்குகளிலும் இருந்து வரக்கூடிய மாணவார்களை இணையக்கூடிய இடமாக பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றன. இத்தளங்களை நாம் திட்டமிட்டு, காத்திரமான முறையில் பயன்படுத்துவோமாயின் இஸ்லாத்தித் தெதிராக பெரும்பான்மை இனத்தின் ஒரு சிலரின் முண்னெடுப்பு நடவடிக்கைகளை ஓரளவாவது குறைக்க முடியும் என நம்புகிறேன். மாற்று மத சகோதரர்களின் சிந்தையில் இஸ்லாத்திற்கெதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நடைமுறை அம்சங்களுடன் இணைத்து ஒரு தூய தெளிவை வழங்கும் போது அது அவர்களது சமூகத்திற்கு சென்றடையக்கூடிய ஊடகமாக அமையும். பல்கலைக்கழக புத்திஜீவிகள், கல்விமான்களினது வார்தைகளை ஒருபோதும் சமூகம் தட்டிகழிக்காது. ஆக்கபுர்வமானது கருத்துக்களை அது ஐPரணித்துக்கொள்ளும். காலப்போக்கில் அச்சமூகத்தில் இன ஒற்றுமைக்கான சூழல் உருவாகும் என்பதை உறுதியாக கூற முடியும். இப்படி ஒவ்வொரு மாற்றுமத சகோதரர்களையும் தத்தமது சமூகத்திற்குறிய இன ஒற்றுமைக்கான தூதுவர்களாக நாம் உருவாக்கும் போது நாட்டில் ஓர் சௌஞன்ய சூழல் உருவாகும்.
புல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் 80 வீதமான பிற மத சகோதரர்கள் இஸ்லாம் பற்றய நேரிய சிந்தனைப்பாங்கை கொண்டவர்கள். பல சகோதரர்கள் இஸ்லாம் தொடர்பான தமது ஐயங்களை முஸ்லிம் சகோதரர்களிடம் தாமாக முன்வந்து கேட்டுத் தெளிவை பெற்றுக் கொள்கிறார்கள். இஸ்லாத்தில் ஏன் இது கூடாது? யார் இந்த முஹம்மத்? எமது மார்க்கத்தில் இவ்வாறு இவ்வாறு கூறப்பட்டுள்ளது, உமது மார்க்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகளை கேட்கின்றனர். இது இஸ்லாம் பற்றி அவர்கள் மத்தியிலுள்ள நல்ல சமிஞ்ஞையின் பிரதிபலிப்பாகும். இவ்வாறு அவர்கள் கேள்விக்கணைகளை எழுப்புவது இஸ்லாம்;, முஹம்மத் நபி, ஹலால் ஹராம், சமூக ஒருமைப்பாடு போன்ற விடயங்களை தற்கால நாட்டு நிலைமைகளை மேற்கோள் காட்டி பேசுவதற்கு தகுந்ந வாய்ப்பாக அமைந்து வடுகின்றது.
எனக்கு சிங்களம் தெரியாதே நான் எவ்வாறு அவர்ளுடன் கதைப்பது, சந்தேகங்களுக்கு தீர்வு வழங்குவது என்று பலர் யோசிக்கக்கூடும். வார்த்தைகளால் சாதிப்பதை விட நடத்தையால், பண்பாடுகளால், இஸ்லாமிய விழுமியங்களால் இஸ்லாத்தை எடுத்துக்காட்ட முடியுமானால் அதுதான் நீடித்து நிலைக்கக்கூடிய, அவர்களில் பாரிய தாக்கம் செலுத்தக்கூடியதாக தீர்வாக இருக்கும். பணிவு, கண்ணியம், காணும் போது புண்ணகையுடன் கலந்த ஓரு உதவிசெய்தல், வார்தைகளில் அழகிய மொழி நடை போன்ற சிறு சிறு செயற்பாடுகள் இவர்கள் மனதில் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய ஓர் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
சக வாழ்வை மேம்படுத்துவதற்கும் இஸ்லாம், முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்ககை களைவதற்கும் பல்கலைக்கழக உள்ளக ரீதியில் பல முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்.
* இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் இன ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல்.
* ரமழான் காலங்களில் அனைத்து இன மாணவர்களையும் உள்ளடக்கும் விதத்திலான இப்தார் ஏற்பாடுகளை செய்தல்.
* பல்லின சமூகங்களையும் ஒன்றிணைந்து இரத்த தான முகாம், வைத்திய முகாம், கண்காட்சிகள், விளையாட்டுப்போட்டிகள், சஞ்சிகை வெளியீடு, விவாத அரங்குகள், கலாச்சார நிகழ்வுகள், சுற்றுலாக்கல் இது போன்ற சமூக நல்லிணக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
* அவர்களுக்கும் எமக்கும் உடன்பாடான விடயங்ளில் ஒன்றிணைந்து செயற்படல். அதற்காக மத ஒப்பீட்டு கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகளை நடாத்துதல்.
* அவர்களது உரிமைகளை மதித்தல். நியாயமான கோரிக்கைக்காக அவர்கள் ஆர்ப்பாட்ங்கள், பகிஷ்கரிப்புகள் நடாத்தும் போது அவர்களுக்கு நாமும் ஒத்துழைப்பு நல்குதல். அப்போதுதான் எமக்கு ஏதாவது பிரட்சினை, அனர்த்தம் ஏற்படுகின்ற போது குரல் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவார்கள்.
இது போன்ற பல செயற்பாடுகளை சிந்தித்து செயற்படுத்துவது பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களது பொறுப்பாகும்.
அன்பார்ந்த பல்கலைக்கழக முஸ்லிம் சகோதரர்களே....!! ஓர் நாள் வரும், மறுமை நாள்.. அந்நாளில் நீ இஸ்லாத்திற்காக என்ன செய்தாய்? என்று வினவப்படுவாய். குறைந்தபட்சம் இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை களைந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சக வாழ்வையும் பேணி நடந்து இறைவனின் கேள்விக்கணக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்போமாக...!
Post a Comment