Header Ads



ராட்சத டயனோசர்களுக்கு டென்னிஸ் பந்து அளவே மூளை - விஞ்ஞானிகள் தெரிவிப்பு



ராட்சத டயனோசர்களுக்கு டென்னிஸ் பந்து அளவே மூளை இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டயனோசர் என்ற அபூர்வ இன விலங்கு வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை பேரிடர் காரணமாக அவை அழிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு ஸ்பெயினில் குயன்கா என்ற இடத்தில் ராட்சத டயனோசரின் எலும்பு கூட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது அவை 7 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த ஆம்பலோ சரஸ் வகையை சார்ந்தது என தெரிய வந்தது.

நீண்ட கழுத்து, நீண்ட வாலை கொண்ட இந்த விலங்கு தாவரங்களை உண்டு உயிர் வாழ்ந்துள்ளன. அதன் மண்டை ஓட்டை '3டி' மூலம் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது இதன் உடல் ராட்சத அளவில் இருந்தாலும், மூளை என்னவோ டென்னிஸ் பந்து அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 3 'இஞ்ச்' அளவே மூளை இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.