கிளிநொச்சியில் புதுப்பொலிவுடன் ஜும்ஆப் பள்ளிவாசல் திறக்கப்படுகிறது
கடந்த 30 வருடகால யுத்தத்தில் அழிந்துபோன பலவற்றில் கிளிநொச்சி ஆப்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலும் ஒன்றாகும். 30 வருடங்களுக்குப் பின் இப்பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படுகின்றது.
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மஹாராணியின் பணிப்புரையில் அவரது ஆளுனரினால் கிளிநொச்சி கண்டி வீதிக்கு அருகாமையில் (அரை ஏக்கர்) 80 பேர்ச்சஸ் நிலம் கிளிநொச்சியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் சமய வழிபாட்டிற்காக அமைக்க வழங்கப்பட்டிருகிறது.
அக்காலத்தில் கிளிநொச்சியில் காக்கா கடைச் சந்தியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்தியாவின் தோப்புத்துறை என்ற இடத்தைச் சேர்ந்த ஆப்தீன் காக்கா, சேகு காக்கா ஆகியோரிடம் இக்காணி கையளிக்கப்பட்டிருக்கிறது
அப்போது இந்தியர்களின் கடைகளில் கணக்குப்பிள்ளையாக ஏ. எல். ஏ. சாகுல் ஹமீட் என்பவரும், விற்பனையாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீட் என்பவரும் கடமையாற்றியிருக்கின்றனர்.
அப்போதுதான் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகரான ஆப்தீன் காக்கா என்பவரின் பணச் செலவில் தொழுகைக்காக பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதனால் ‘ஆப்தீன்’ என்பவரின் பெயரையே இப்பள்ளிவாசலுக்கு சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்பின்பு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி சமய விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. பதிவிலக்கம் ஆர்/889/கேஎன்/02 ஆகும்.அதன்பின்னர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சி கச்சேரியின் அனுமதியுடன் முதலாவது நம்பிக்கையாளர் சபை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நம்பிக்கையாளர் சபையில் இந்தியாவைச் சேர்ந்த ஆப்தீன் காக்கா, சேகு காக்கா, இஸ்மாயில் காக்கா போன்றோர் சபையில் அங்கம் பெற்றிருந்தனர். இவர்கள் இந்தியா சென்ற பின்னர் இலங்கையின் மருதமுனையைச் சேர்ந்த ஏ. எல். ஏ. சாஹுல் ஹமீட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீட் உள்ளிட்ட சிலர் நிர்வாகத்தை பொறுப்பேற்றனர்.
அவர்களுக்குப் பின்னர் பள்ளிவாசலோடு தொடர்புடைய ஒரு சிலரும் நிர்வாகிகளாக இருந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை தங்கள் சொத்துக்களை இழந்து எல்லா முஸ்லிம்களும் விரட்டப்பட்டமை மறுக்க முடியாததாகும்.
2010 ஆம் ஆண்டு யூ. எல். ஏ. வாஹீத், எஸ். எச். சாஜஹான், எம். எஸ். றாசிக் ஆகியோருடன் இன்னும் சிலர் ஒன்றிணைந்து இப்பள்ளிவாசல் அமைந்திருந்த காணியை இனங்கண்டு காணியை துப்புரவு செய்து தொழுவதற்கு சிறிய கொட்டிலொன்றை அமைத்தனர்.
இதன் பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகம் எடுத்த முயற்சியின் பயனாக மெளலவி எம். எல். நெளபர் கபூரி தலைமையிலான ‘நிதாஉல் ஹைர்’ நிறுவனத்தின் மூலமாக அழகிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மாஷா அல்லாஹ்.
ReplyDeleteஇறைவா இம்மக்களை மன்னித்து, பொருந்திகொள்வாயாக. ஆமீன்.
ReplyDeletealhamthulillah
ReplyDelete