போர் பதற்றத்தை இந்தியாவே உருவாக்குகிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானிகர் நியூயார்க்கில் ஆசிய கூட்டமைப்பு மாநாட்டில் பேசியதாவது,
காஷ்மீர் எல்லையில் 2 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மூலம் இந்தியா போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இருந்து வரும் அறிக்கைகள் (மன்மோகன்சிங் பேச்சு) எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த போர் பதற்றத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. இந்தியாவும் -பாகிஸ்தானும் எந்த குறுக்கீடும் இல்லாமல் குறுக்கீடுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கடந்த 60 ஆண்டு காலமாக எங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து போர் பதற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இந்திய வீரர்கள் கொல் லப்பட்டதற்கு பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி அதனால் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேர் இறக்கிறார்கள். அதேபோல் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேர் இறக்கிறார்கள். இதற்கு பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி போர் பதற்றத்தை உருவாக்குகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment