உலகின் அதிநவீன சொகுசு விமானத்தில் கோளாறு
உலகின் அதிநவீன சொகுசு விமானமான 'ஜம்போ டிரீம் லைனர் 787' சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான சில நாட்களிலேயே தொழில்நுட்ப கோளாறுகளை இந்த விமானம் சந்திக்க நேர்ந்துள்ளது. வேகமாக பறக்கும் வேளைகளில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் ஏற்படுவதாக முதலில் கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாஸ்டன் நகர விமான நிலையத்தில், இந்த விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவது கண்டறியப்பட்டது. இதனால் சிறு தீ விபத்தும் ஏற்பட்டது.
ஜப்பான் நாட்டு விமான சேவை நிறுவனமான 'ஆல் நிப்பான் ஏர்வேஸ்' 45 போயிங் டிரீம் லைனர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நரீடா விமான நிலையத்தில், இந்த விமானம் தரையிறங்கியபோது மீண்டும் எரிபொருள் கசிவு ஏற்பட்டது.
உலகின் பல முக்கிய விமான சேவை நிறுவனங்களின் ஆர்டர்களை அள்ளிக் குவித்துள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் இந்த கோளாறுகளை சரிசெய்வது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
Post a Comment