Header Ads



வெளிநாடு செல்ல காத்திருக்கும் றிசானாக்களும்..! வெளிநாடுகளில் உள்ள றிசானாக்களும்..!!



(பரக்கத் அலி ஏ.ஆர்.
ரியாத் - சவுதி அரேபியா)

வெறுமனே எழுத்துக்களாலும், வார்த்தைகளாலும் தங்களுடைய வருத்தங்களை வெளிப்படுத்துவதை விட இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் காரியம் செய்ய களம் இறங்க வேண்டும். 

ரிஸானா போன்ற சில/பல சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்றும் அரபு நாடுகளில் சிறையில் இருப்பதாக கேள்வியுறுகிறோம். அவர்கள் அனைவரும் நல்லவர்களா அல்லது குற்றம் புரிந்தவர்களா என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சட்டப்படி செய்ய இலங்கை அரசின் தூதரகங்கள் முன்வருவதாக தெரியவில்லை. அவர்களுக்கு இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் அழுத்தம் கொடுக்க தங்களுடைய நாடு அனுமதிக்கும் வகையிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 

தீர்வுகளை பேச்சளவில் பேசிக்கொண்டிராமல் செயல்படுத்த இலங்கையை சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனும் முன் வரவேண்டும். வெளிநாட்டிற்கு வேலைக்கு வரும் பெண்கள் எழுத்தில் எழுத முடியாத வகையில் அவதியுறுகிறார்கள். சிலர் சிறப்பாகவும் இருக்கிறார்கள். 

வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கக்கூடிய முஸ்லிம் சகோதரர்கள் வெளிநாட்டிற்கு தன் மகளை, மனைவியை, தாயாரை வேலைக்கு அனுப்பி பொருளீட்டும் எண்ணத்தில் உள்ள 3 குடும்பங்களை தத்தெடுத்து அவர்களின் அவல நிலையை போக்கி ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படும் நிலையை உண்டாக்கினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? அப்படி செய்யும் சகோதரர்கள் பொதுதளங்களில் அதை பகிரங்ப்பபடுத்தினால் மற்றவர்களையும் அது ஊக்கப்படுத்துவதாக அமையுமே.?

இலங்கையில் முஸ்லிம்களை கறுவருத்த விடுதலை புலிகளுக்கு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் கூட்டாக பொருளாதார உதவிகளை செய்து வந்தனர். தனது சமுதாயத்தின் கண்ணியத்தை காக்க முஸ்லிம்களாகிய நாம் ஏன் கூட்டாக ஒரு முயற்சியை செய்யக்கூடாது.?

தேசத்தால் இந்தியனாகிய நான் எனது முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தை காப்பதற்காக என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டுள்ள, நாட்டு வெறி, மண் வெறி மற்றும் மொழி வெறியற்ற இன்னும் சில சகோதரர்களிடமும் இதுபற்றி எடுத்துச்சொல்லி அவர்களின் பங்களிப்பையும் பெற நான் முயற்சி செய்கிறேன்

இறைவனுக்கு அஞ்சியவர்களாக, இலங்கையின் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கொடுக்கல் வாங்கலில் தூய்மையாக, சீரான நிர்வாகம் செய்ய இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் யாரும் முன் வருவீர்களா?

அல்லது எனது பார்வையில் நம்பத்தகுந்த நிர்வாகமாக இருக்கும் எஸ்.எல்.டி.ஜெ நிர்வாகத்திடம் இந்த பொருப்பை கொடுக்க சம்மதிப்பீர்களா? 

இது எதுவும் வேண்டாம் நாங்கள் ஏற்கனவே இதுபோல் செய்து கொண்டுள்ளோம். அதில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று எங்களையும் அழைப்பீர்களா?

வெறுமனே புலம்புவதை தவிர்த்து ஏதாவது செய்வோமே? நன்மையின் பால் நாம் ஒரு அடி எடுத்து வைப்போம். இன்ஷா அல்லாஹ் இறைவன் நமது பயணத்தை இலகுவாக்குவான். 

எல்லோருக்கும் இறைவன் அருள் புரியட்டும்.



4 comments:

  1. அட நல்லதொரு முயற்சி எஸ்.எல்.டி.ஜெ.யை நம்பலாம் முஸ்லிம்கள் விடயத்தில் ஈடுபட்டு உழைப்பார்கள் என்று.

    ReplyDelete
  2. ethukku pallikatti innum konjamaavathu OTRUMAIYA irukkira samoohaththa pirikkavaa pothum piriththathu samoohaththai niraiyave samoohappatrulla amaippukkal namathu naattilum irukkirathu.

    Nantri Ungalathu Aalosanaikku.

    ReplyDelete
  3. Really a good move...
    I will support my best! Lets get together under one roof and help our community.

    ReplyDelete
  4. good.
    Nalla aalosanai nalla muyattchi nanum ithai aamoothikkiren..

    ReplyDelete

Powered by Blogger.