Header Ads



அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி மரணமானார்


(எஸ்.எல். மன்சூர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கோட்டத்திற்கான கோட்டக்கல்வி அதிகாரியாக கடந்த ஏழு வருடங்களாக கடமையாற்றிவந்த அல்ஹாஜ். என்.கே.எம். இப்றாகீம் இன்று(2013.01.31) காலையில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜிஊன். இவர் கடந்த 1972ஆம் ஆண்டு விஞ்ஞான ஆசிரியராக கல்விப்புலத்தில் தனது சேவை ஆரம்பித்து, பயிற்றப்பட்ட ஆசிரியராக நீண்டகாலம் சேவையாற்றி அதிபர் சேவையில் சுமார் 15வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றியதன் பின்னர் அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு தனது கல்விப் பணியை மேற்கொண்டு வந்தநிலையில் சிறுதுகாலம்  சுகவீனமுற்றிருந்த நிலையில் காலமானார். 

அதிபர் சேவையில் முதற்தர நிலையினை அடைந்திருந்தாலும் தனது விஞ்ஞானக் கற்றலை மாணவர்களுக்கு திறமையாக கற்பிக்கும் ஒரு ஆசிரியராக மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தை வகித்;து வந்தார். அதிபராக, கோட்டக்கல்வி அதிகாரியாக தனது சேவையை பதிவு செய்து கொண்ட அல்ஹாஜ் என்.கே.எம். இப்றாகீம், ஆசிரியர்களின், மாணவர்களின் மனதில் மட்டுமன்றி தனக்கு மேலுள்ள அதிகாரிகளிடமும் பணிவுடனும், பண்புடனும் தனது பேச்சாற்றல் மூலமாக அனைவரையும் கவந்திருந்தார். 

இன்னாரின் இழப்பு அட்டாளைச்சேனையைப் பொறுத்தளவில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த வேளைகளிலும் எவ்வேளையிலும் யாரிடமும் அன்பாகப்பேசி தனது கோட்டத்தின் கல்வியின் அடைவுமுன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டுக்கொண்டே இருந்தார். இன்னாரின் மரணச் செய்திகேட்ட அனைவரின் கண்களிலும் நீரை வரவைத்துக் கொண்ட அன்பாளனான அல்ஹாஜ்.என்கேஎம். இப்பறாகீம் அனைவராலும் மதிக்கப்பட்டு வந்த ஒரு கல்வி அதிகாரியாவார். இவரை இழந்து சோகித்துப்போனநிலையில் அட்டாளைச்சேனைப் பிரதேசம் மட்டுமன்றி அக்கரைப்பற்று கல்விவலயம் காணப்படுகின்றது. அன்னாருக்கு ஜன்னத்துல்பிர்தௌஸ் சுவனம் கிடைக்க வேண்டுமென அனைவரும் பிராத்திப்போமாக.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    இறைவா அன்னாரை நீ மன்னித்து அருள் புரிவாயாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.