Header Ads



எனது மகள் றிஸானாவை அல்லாஹ்தான் தந்தான், இப்போது அவன்தான் எடுத்துள்ளான்..!


(மூதூர் முறாசில்)

எனது மகள் றிஸானாவை அல்லாஹ்தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான  நம்பிக்கை  என றிஸானா நபீக்கின் தயார் றிஸினா நபீக் தெரிவித்தார்.

றிஸானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு முதன் முதலாக நேற்று வெள்ளிக் கிழமையன்று    ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவித்தபோதே  அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,,

ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினால் அது எத்தகையதாக இருந்தபோதும்       மறுமையில் றிஸானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும்.  அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.

வெள்ளிக்கிழமையான  இன்று உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்தச்; சகோதரியாகக் கருதி 'துஆ' பிரார்த்தனையில்  ஈடுபட்டதானது இதனையே மேலும்   உறுதிப்படுத்துகின்றது.

இதனால்; றிஸானாவுக்கு வழங்கப்பட்ட  தீர்ப்புப்பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.

இதேவேளை  றிஸானாவுக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை  முயற்சித்து வந்த     அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு  அல்லாஹுதஆலா அனைவருக்கும்  பேரருள் புரியவேண்மென பிரார்த்திக்கின்றேன் என்றார்.




10 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ், நல்ல பக்குவப் பட்ட, ஈமானியத்தான, தக்வா நிறைத்த கருத்து.
    அல்லாஹ் சகோ ரிசானாவின் பாவங்களை மன்னித்து சுவர்கத்தைக் கொடுப்பதோடு அவரது பெற்றோர்களுக்கும் குடும்பத்தினற்கும் ரஹ்மாத்தையும் ஈம்மனில் இன்னும் பலத்தையும் செல்வத்தையும் கொடுப்பானாக...! ஆமீன்

    ReplyDelete
  2. மாஸாஅல்லாஹ்.........

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் அந்தத்தாய்குள்ள இறைநம்பிக்கையை முகநூளில் விமர்சனக்கருத்துகள் பரிமாறிக்கொள்ளும் நம் சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் வழங்குவானாக கத்ர் பற்றிய நம்பிக்கையையும் வழங்குவானாக !அந்தத்தாயே அல்லாஹ்வின் தீர்ப்பை போருந்திக்கொண்டுள்ள போது இத்துடன் நாம் அனைவரும் இதை நிறைவு செய்துகொள்ளலாம் அல்லவா ?

    ReplyDelete
  4. யாஅல்லாஹ் இந்த தாயினுடைய வார்த்தை எமது நபி ஸல்லல்லாஹு அலைகிவஸல்லம் அவர்களுடைய தோளர்களுடைய வாழ்கையை நினைவு படுத்துகிறது. இந்த தாயினது ஈமானை மேலும் உருதிப்படுத்திவைப்பாயாக.

    ReplyDelete
  5. போதுமான கல்வி அறிவு இல்லாத சமூகங்களிலும் வறுமை உள்ள சமுதாயங்களிலும் பகுத்தறிவு பற்றாக்குறையாகவே உள்ளது.



    அதனை வைத்து மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிழைத்துக்கொள்ளுகிறார்கள்.

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லாஹ்..........

    யா அல்லாஹ் நீயே அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

    யா அல்லாஹ் அந்த தாய்க்கும், குடும்பத்துக்கும் இம்மையிலும் மறுமையிலும் அருள்பாலிப்பாயாக. ஆமீன் .

    ReplyDelete
  7. யா அல்லாஹ் றிஸானாவுடைய பாவங்களை மண்ணித்து ஜன்னதுல் பிர்தௌஸில் உயர்ந்த தரஜாவை கொடுப்பாயாக.

    யா அல்லாஹ்அவருடைய குடும்பத்தாறுக்கு உறுதியான ஈமானை கொடுப்பாயாக. அவர்களுடைய சகல தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக.
    பரக்கத்து செய்வாயாக.

    ReplyDelete
  8. Alhamdu lilla. Rizana ku allah hu thahala jannathul firdaus ennum svargathai kuduppanaaga ameen

    ReplyDelete

Powered by Blogger.