Header Ads



மகள் என்றால் விமானமும் பாதை மாறி பறக்கும்..!


பாகிஸ்தானில், விமானியின் மகளை தரையிறக்குவதற்காக, திசை மாறி சென்ற விமானத்தால், சர்ச்சை எழுந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம், இஸ்லாமாபாத் நோக்கி புறப்பட்டது. இதில் பயணித்த அனைத்து பயணிகளும், விமானம் இஸ்லாமாபாத் நோக்கி செல்வதாக நினைத்திருந்தனர். ஆனால், இந்த விமானம் திடீரென லாகூர் நோக்கி சென்று தரையிறங்கியது."இஸ்லாமாபாத் புறப்பட்ட விமானம் ஏன் லாகூரில் தரையிறங்கியது' என, பயணிகள் கேட்ட போது, எரிபொருள் நிரப்ப தரையிறங்கியதாக, ஒரு தரப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், தரையிறக்கப்பட்டதாக மற்றொரு தரப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.லாகூரில் விமானம் தரையிறங்கிய போது, இளம் பெண் ஒருவர், விமானத்திலிருந்து இறங்கிச் சென்றார். பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட்டாக உள்ள, தாரிக் ஜாவித்தின் மகள் இவர் என்பது பின், தெரியவந்தது.இவரை தரையிறக்குவதற்காக தான், இஸ்லாமாபாத் நோக்கி சென்ற விமானம், லாகூரில் தரையிறங்கிய விவரம் தெரிந்தது. இதனால், இந்த விமானத்தில் பயணித்தவர்கள் கொந்தளித்தனர்.


No comments

Powered by Blogger.