Header Ads



பாலியல் பலாத்காரத்திற்கு குட்டை பாவாடையும், ஹை ஹீல்ஸ் ஷூவும் - இங்கிலாந்து எம்.பி.


குட்டை பாவாடையும், ஹை ஹீல்ஸ் ஷூவும் இளம்பெண்கள் அணிவதே, பாலியல் பலாத்காரம் அதிகரிக்க காரணம் என்று இங்கிலாந்து எம்.பி. ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இங்கிலாந்தின் குளவ்செஸ்டரை சேர்ந்தவர் ரிச்சர்ட் கிரகாம். கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யாக இருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், குட்டை ஸ்கர்ட், ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லும் இளம்பெண்கள், பலாத்காரத்துக்கு ஆளாக வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறினார். இத்தகவல் உள்ளூர் பத்திரிகையான தி சிட்டிசன் வெளியிட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

மோசமான உடைகளை உடைத்தி கொண்டு செல்லும் போது, உங்களால் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் ரிச்சர்ட். இவருடைய கருத்துக்கு பலாத்காரத்துக்கு எதிரான அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் உடை விஷயத்தையே எல்லோரும் பெரிதாக்குகின்றனர். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனதை எம்.பி.யின் கருத்து மேலும் புண்படுத்துவது போல் உள்ளது. பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை எப்படி தடுக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து கேட்க எம்.பி.யை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சிட்டிசன் பத்திரிகை கூறியுள்ளது.

8 comments:

  1. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய காரணத்தை சொன்னதும் பொறுக்க முடியவில்லை. "யாரு நல்லது சொன்னாலும் கேட்க மாட்டோம் நாசமாய் போவேம்" என்கிற அமைப்பை எல்லாம் முதலில் தடை செய்யணும்..!


    ReplyDelete
  2. இந்த மாடுகளுக்கு புரியவில்லையா பலாத்காரத்துக்கும் அதை தடுப்பதுக்கும் பரிகாரமே உடம்பை மூடிய ஆடைகள் என்று

    ReplyDelete
  3. Hi Friends,

    ஆண்களாயினும் பெண்களாயினும் கண்ணியமாக உடையணிந்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

    ஆனால் இன்று நமது சமூகச்சூழலிலே இது எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது?

    ஒரு இளைஞன் தனது மனைவியை மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்திலே வைத்துக்கொண்டு பயணிக்கின்றான். அந்தப்பெண் வழக்கமான உடைகளுக்கு மேலதிகமாக தனது உடலை தலைமுதல் பாதம் வரை முழுதாக மறைக்கும் கறுப்புநிற மேலங்கியும் அணிந்திருக்கிறாள்.

    ஆனால் கணவனோ தனது உடலின் தசைகளை இறுக்கிப் பிடித்திருக்கும் டீசேர்ட்டை மார்பு உரோமங்கள் தெரியுமளவுக்கு அணிந்திருக்கின்றான். அதுமட்டுமல்ல தனது பிறப்புறுப்பு இருக்கும் பாகம் வெளியே தள்ளிக்கொண்டு தெரியும் வகையில் இறுக்கியும் பின்புறமாக ஆசனப்பகுதியினூடாக உள்ளாடை வெளித்தெரியுமளவுக்கு ஜீன்ஸை நன்கு இறக்கியும் அணிந்திருக்கின்றான்.

    இப்படியான காட்சிகள் இறுக்கமான இஸ்லாமிய விழுமியங்களைப் பேணவிரும்பும் நமது பிரதேசங்களிலே சாதாரணமாக காணக்கூடியவைதானே?

    இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே?


    பெண்களுக்கான இந்த மேலதிக ஆடைய அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை காக்கும் என்பது தான்.

    பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம். ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக எண்ணாததன் வெளிப்பாடுதான்.

    எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

    பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயியினும், வேறு பெண்களாயினும், முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல.

    ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

    பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால் பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள்.

    பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல,எதற்கும் உரிமையில்லை.

    Anyway, எந்த வகைக் குற்றமானாலும், குற்றம் புரிவதற்கான தேவையும், தூண்டுதலும் சமூகத்தில் இருக்கும் வரை குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கிவிட முடியாது. சட்டம் போட்டு மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியும் என்பது கடல்நீரைக் காய்ச்சி சர்க்கரை எடுக்கலாம் என்பது போன்று அபத்தமானது.


    ReplyDelete
  4. மேற்க்கில் பிரந்த அவர் விலங்கியிருக்கிரார் நுலம்புத்தோல்லைக்கு நுலம்புச்சுருலோ,னுலன்பு வலையோ, அல்ல பிரச்சினை சக்கடையை ஒலிக்க வேண்டுமென்ரு.

    ReplyDelete
  5. மேற்க்கில் பிரந்த அவர் விலங்கியிருக்கிரார் நுலம்புத்தோல்லைக்கு நுலம்புச்சுருலோ,னுலன்பு வலையோ, அல்ல பிரச்சினை சக்கடையை ஒலிக்க வேண்டுமென்ரு.

    ReplyDelete
  6. மிக்க நன்றி இம்தியாஸ்,

    நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

    அத்துடன் சிறப்பான உதாரணமும் தந்திருக்கின்றீர்கள். ஆம்! நுளம்புத்தொல்லையென்பது சமூகத்தில் தொடர்ந்து இருந்து வருவது. அதற்காக நாம் நுளம்புச்சுருளையும் வலைகளையும் பயன்படுத்தி வந்தாலும் கூட எல்லா நேரங்களிலும் அவற்றைக்கொண்டு நுளம்புக்கடியிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. எனவே நுளம்புகள் பெருகுவதற்கான சாக்கடைகளை முற்றாக ஒழிப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

    அதுபோலத்தான் இந்த ஆடைகளின் விடயமும். கண்ணியமாக அடை அணியும் பெண்களும்கூட வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவு ஏன் காமத்தை தூண்டும் சக்தியற்ற சிறுகுழந்தைகளைக்கூட காமக்கிறுக்கர்கள் துஷ்பிரயோகம் செய்யவில்லையா என்ன? வயது முதிர்ந்து தளர்ந்துவிட்ட வயோதிபப் பெண்களை பலாத்காரம் புரியவில்லையா? அப்படியானால் அது சிறுகுழந்தைகளினதும் வயோதிப மாதுகளினதும் தவறா?

    சமூகத்திலுள்ள ஏற்ற தாழ்வுகள் ஒழிக்கப்பட்டு குற்றம் புரிவதற்கான தேவை ஒழிக்கப்படுவது ஒன்றே இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்குமென்பதை உங்களைப்போலவே ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. ஹாய் ஜெஸ்லியா,
    இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடையுடன் எழுதும் நீங்கள் அதற்க்குப் பொருத்தம் இல்லாத கருத்தையும் அநாகரிகமான முறையிலும் எழுதுவதையும் தவிர்க்கவும்.

    ReplyDelete
  8. ஹாய் ஜெஸ்லியா,
    இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடையுடன் எழுதும் நீங்கள் அதற்க்குப் பொருத்தம் இல்லாத கருத்தையும் அநாகரிகமான முறையிலும் எழுதுவதையும் தவிர்க்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.