கிளிநொச்சியில் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ (படங்கள்)
கடந்த யுத்தகாலத்தில் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட அஞ்சல் அலுவலகம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் சுமார் ஐநூறு இலட்சம் ரூபா செலவில் வடமாகாணத்திலே மிகவும் சிறப்பானதொரு தபால் நிலையக் கட்டடத் தொகுதியாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் றோகன பசில் ராஜபக்ச. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறீ ஆகியோர் இணைந்து இக்கட்டிடத்தினை திறந்து வைத்து. செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தனர்.
...............................................................................................................
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரத்தினபுரி மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட உலருணவுப் பொருட்கள் அம்மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இப்பொருட்களை கிளிநொச்சிக்கு விஜயம்செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் றோகண பசில் ராஜபக்ச அவர்களும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களும் வடமாகாண ஆளுநர் அவர்களும் மக்களிடம் கையளித்தனர். அத்தோடு சுமார் 33மில்லியன் ரூபா செலவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதிமூலம் நிர்மாணிக்கப்பட்ட ஐந்தடிவான் பாலத்தினையும் இவர்கள் மக்களின் பயன்பாட்டுக்காக கையளித்தனர்.
Post a Comment