நாட்டில் முதுகெலும்புள்ள மக்கள் இல்லை - தீனியாவல பாலித தேரர்
(Sfm) முதுகெலும்புள்ள மக்கள் எம் நாட்டில் இல்லை என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதம செயலாளர் தீனியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 13-01-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
வெள்ளத்தினால் மூன்று மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பால் மா பக்கெட் ஒன்றை வழங்குவதற்கு கூட எவரும் முன்வரவில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ள அவர், அனைத்து 100 ரூபாவிற்கும் அரசாங்கம் 63 ரூபாவை வரியாக அறவிடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சிலர் சுகம் அனுபவிக்க மக்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தீனியாவல பாலித தேரர், அனைவரும் ஒன்றிணைந்து வரிக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியுமாயின் அதுவே முக்கியமானதொரு விடயம் என்றார்.
எனினும், அவ்வாறு முதுகெலும்புள்ள மக்கள் எமது நாட்டில் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment