மன்னாரில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்படும் பிரதேச பாதுகாப்புக்கு திட்டம் வகுப்பு - றிசாத்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை மற்றும் மல்வத்து ஓயாவில் ஏற்பட்ட நீர் அதிகரிப்பு என்பனவற்றையடுத்து மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருந்ததுடன்,மன்னாருக்கான போக்குவரத்துக்கள் தடைபட்டுமிருந்தன.
இந்த வெள்ளப் பெருக்கால் முசலி பிரதேசத்தின் போக்குவரத்துக்கள் முற்றாக தடைபட்டிருந்தன.தற்போது வெள்ள நீர் வழிந்துள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலி பிரதேசத்தில் உள்ள கரடிக்குளி,மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கொண்டச்சி,கொக்குபடையான்,தம்பட்டை முதலியார்கட்டு,சிலாவத்துறை,முள்ளிக்குளம்,காயாக்குளி,அகத்தி முறிப்பு,பெற்கோணி,கூளாங்குளம்,மற்றும் வேப்பங்குளம் ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.
அப்பகுதி மக்களால் முன் வைக்கப்பட்ட பல் வேறு தேவைகள் குறித்து தமது கவனத்தை செலுத்திய அமைச்சர்,உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.அதே வேளை பாதிப்புக்குள்ளான மக்களின் விவசாய சேத விபரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும்,தொடர்ந்து வெள்ள அச்சுறுத்தல் ஏற்படும் பிரதேச மக்களின் பாதுகாப்பு குறித்தும் திட்டமொன்றை வகுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீ்ன் கூறினார்.
அமைச்சருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,முசலி பிரதே சபை தலைவர் யஹ்யான்,பிரதி தலைவர் பைரூஸ் மௌலவி,உறுப்பினர்களான சுபியான்,காமில்,முசலி பிரதேச செயலளார் கேதீஸ்வரன்,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் எஸ்.எல்.டீன்,மன்னார் நகர சபை உறுப்பினர் நவுசீன்,அனர்த்த முகாமைத்துவ மன்னார் மாவட்ட பணிப்பளார் றியாஸ்,அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான அலிகான் ஷரீப்,எம்,முனவ்வர் உட்பட பலரும் வருகைத் தந்திருந்தனர்.
Intha nadu mahgalin thalaiver than inthatha Hon Rishad Bathirudeen allah ahber
ReplyDelete