Header Ads



முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாட சதி - எச்சரிக்கிறார் அமைச்சர் றிசாத்


(Tm +றிப்தி அலி)

 நாட்டில் முஸ்லிம்கள் பந்து போன்று விளையாடப்படுகின்றனர் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

 "ஏனைய இனத்தவர்களினால் வட பகுதியிலும் முஸ்லிம்களுக்கு பிரச்சினை தென் பகுதியிலும் முஸ்லிம்களுக்கு பிரச்சினை. இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பலத்த சிரமங்களுடன் முஸ்லிம்கள் இன்று இலங்கையில் வாழந்து வருகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

 வைத்தியர் அஸாத் எம். ஹனீபாவின் 'ஆத்மாவின் புண்' எனும் கவிதை நூல் வெளீயீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. 

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளீயீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன்,

 "முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாட வேண்டும் என்ற நோக்கத்தில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒரு குழுவினர் செயற்படுகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே மஹகரமையிலுள்ள நோளிமிட் காட்சியறைக்கு முன்னபாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இதன் உரிமையாளர் முஸ்லிம் என்ற காரணத்தினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  பௌத்த மதத்தை சேர்ந்த சிறியதொரு குழுவினரே முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூரையாட வேண்டும் என நினைக்கின்றனர்.

 எனினும் இந்த குழுவினரின் செயற்பாடு சமூக ஊடகங்களின் ஊடாக மிக வேகமாக இடம்பெற்று வருகின்றனது. இதனால் ஏனைய மக்களும் இந்த பிரச்சார நடவடிக்கையினுள் உள்வாங்கப்படுகின்றனர். இதனால் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.

 1983ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தினால் தமிழ் மக்களின் பொருளாதாரம் சூறையாடப்பட்டது. அதேபோன்றே முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் சூறையாட இந்த குழுவினர் முற்படுகின்றனர். 

அத்துடன், முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என பட்டம் சூட்ட முயற்சிக்கின்றனர். எனினும் முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டுக்கு எதிராக செயற்படவில்லை. சுமார் 30 வருட யுத்தம் இடம்பெற்ற கால பகுதியிலும் கூட நாட்டு ஆதரவாகவே முஸ்லிம்கள் செயற்பட்டனர்.

 இதேபோன்று வட மாகாணத்திலிருந்து கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றும் போது தடுக்கின்றனர். அன்று விடுதலை புலிகளுக்கு உதவிய குழுவினரே இன்று இந்த செயற்பர்டுகளில் ஈடுபடுகின்றனர்.

 இவர்களுடன் இணைந்துகொண்டு மதகுருவொருவரும் வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றார். இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்நத 300,000 தமிழ் மக்களை நான் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோது எந்தவித பாரபட்சமுமின்றி மீள்குடியேற்றினேன்.

 ஆனால் இன்று இடம்பெயர்ந்த 100,000 முஸ்லிம்களை மீள்குடியேற்றும்போது எதிராக போராடுவது, புதிய குடியேற்றம் எனவும் அழைக்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.

 தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் உறவுப் பலமாக கலைஞர்கள் செயற்பட்டனர். வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதும் அழிஞ்சிப்பொத்தாணையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாகவே செயற்பட்டன. 

இதற்கு பிரதான காரணமாக கவிஞர்களே செயற்பட்டனர். இது பாராட்டத்தக்க விடயமாகும். இந்த ஒற்றுமை தொடர்ந்து காணப்பட வேண்டும்" என்றார்.

7 comments:

  1. சிறிய குழு, சிறிய குழு என்று எல்லோரும் சொல்கிறீர்களே ஏன் இந்த அரசு அதனை முடக்க துவங்க வில்லை, அப்படி என்றால் இவர்கள் ஜனாதிபத்தியை விட அதிகாரம் கொண்டவர்களா? இல்லை ????????????????????????????????????????????

    ReplyDelete
  2. சார் நீங்கள் சொன்ன பந்து விளையாட்டில்......

    நீங்கள் பார்வையாளரா ? இல்லை 3ம் நடுவரா?

    சார் நானும், நீங்களும் படித்த வரலாறு போதும். நிகழ் கால தீர்வு என்ன?

    ReplyDelete
  3. "Agini kunchonru kanden; athai aangoru kaatilor bonthidai vaithen; venthu tanithathu kaadu.. thzahl veegathil kunchenrum moopenrum undoo"... saathi kodumaikku maha kavi yin muthana varigal...

    ReplyDelete
  4. ஜனாதிபதிட்ட கொஞ்சம் சொல்லுங்க sir பாவம் அவருக்கு தெரியாம இருக்கலாம்

    ReplyDelete
  5. விடும் அறிக்கை இனால் ஒன்றும் ஆகி விடாது......... குரல் கொடுக்கவும் உயிர் கொடுக்கவும் தயாரானவன் சிறந்த முஸ்லிம் தலைவன்......... அதட்கு பொருத்தமானவர்கள் ????

    ReplyDelete
  6. POliticians r just thinking about there survival....y they cat talk about theses on public/cabinet meetings...fooling peoples!

    ReplyDelete
  7. இப்ப உள்ள முஸ்லிம் அமைச்சர்களில் நீங்க ஒரு கட்ஸ் ஆனா அமைச்சர் என்று நாங்கள் கருதுகிறோம். அனால் இந்த விடயத்தில் நீங்கள் என்ன முடிவு எண்டுக்க போகிறீர்கள் என்று தான் எதிர் பர்க்கிரெஒம்.

    ReplyDelete

Powered by Blogger.