Header Ads



சுபியான் மௌலவியின் இலாபத்திற்காக என்னை இடமாற்ற முயற்சி - ஒஸ்மானியா அதிபர் முபாரக்


யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் வளர்சிக்காக செயற்படும் தன்மீது சுபியான் மௌலவி வீண்பழி சுமத்தி இடமாற்றுவதற்கு முயற்சிப்பதாக ஒஸ்மானியா கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் தெரிவித்தார்.

இதுதொடர்பில் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அவர் மேலும் கூறுகையில்,

மௌலவி சுபியான் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக என்னை வேறு பாடசாலைக்கு இடமாற்ற முயற்சிக்கிறார். யாழ்ப்பாணத்தைச சேர்ந்த தமிழ் கல்வி அதிகாரிகள் எவருக்கும் எனது இடமாற்றத்தில் விருப்பமில்லை. யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள 99 சதவீத முஸ்லிம்களுக்கும் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பதவியிலிருந்து என்னை வெளியேற்ற இணக்கம் இல்லை.

மௌவி சுபியான் தனது தனிப்பட்ட சுயஇலாபங்களுக்காக செயற்படுகிறார். எனவே அவர் என்னை ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பதவியிலிருந்து வெளியேற்ற முயலுகிறார். இதற்கு யாழ்ப்பாண தமிழ் கல்வி அதிகாரிகளும், யாழ்ப்பாண முஸ்லிம்களும் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.


ஒஸ்மானியா கல்லூரியின் அதிபராக நான் நியமனம் பெற்றவுடன் கல்லூரி வளர்ச்சிப் பாதையில் நகருகிறது. அதிபர் தரத்திற்கான பரீட்சைக்கும் தோற்றியுள்ளேன். விரைவில் அதற்கான நேர்முகப் பரீட்சையும் நடைபெறவுள்ளது. அதிபர்தர தகுதியை கொண்டுள்ள ஜெலீல் மாஸ்டர் ஓய்வுபெற இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளன.

ஒஸ்மானியா கல்லூரியை மேலும் திறம்பட நடாத்திச்செல்ல யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒத்துழைப்பை தான் எதிர்பார்ப்பதாகவும் மேளலவி முபாரக் மேலும் கூறினார்.

முக்கிய குறிப்பு - மௌலவி சுபியானுடன் இதுதொடர்பில் யாழ் முஸ்லிம் இணையம் உரையாடியது. இருந்தபோதும் தான் கூறிய கருத்துக்களை எக்காரணம் கொண்டும் பிரசுரிக்க வேண்டாமென அவர் கூறியதால் அக்கருத்துக்களை நாம் இங்கு பதிவு செய்யவில்லை



1 comment:

Powered by Blogger.