கல்முனையில் வெள்ளப்பெருக்கு - நிலைமைகளை பார்வையிட்டார் மேயர் (படங்கள்)
பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்தின் சில பகுதிகளில் வௌளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் குடியிருப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று குறித்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அவ்வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.
பாண்டிருப்பு அல் மினன் வீதி, கல்முனை தமிழ் பிரிவில் உள்ள குவாரி வீதி, வட்ட விதான வீதி, மாதவன் வீதி, கல்முனைக்குடி செய்லான் வீதி, புதிய வீதி அகியவற்றிலும் அவ்வீதிகளில் அமைந்துள்ள குடியிருப்புக்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் வழமையான நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரதேசங்களுக்கு ஜே.சி.பி வாகனத்துடன் சென்று முதல்வர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாய் வெள்ள நீர் வடிந்தோடியது.
அல்மினன் வீதி, மாதவன் வீதி என்வற்றில் வடிகான் அமைக்கப்படாமையினாலும், குவாரி வீதி, வட்ட விதான வீதி என்வற்றில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் தொடர்ச்சி இன்மையினாலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
குறித்த வடிகான்களை மாநகர சபையினால் 2013ம் ஆண்டு மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மக்களிடம் முதல்வர் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது ஆணையாளர் ஜே.லியாகத்அலி மற்றும் ஊழியர்கள் பிரசன்னமாயிருந்தனர.
Post a Comment