சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம்
(ஜே.எம்.ஹபீஸ்)
கடந்த 2009ம் ஆண்டு முதல் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு ஜனவரி 4ம் திகதியை சிறுவர் துஷ்பிரயோக எதிர்ப்பு தேசிய தினமாகப் பிரகடணப் படுத்தி அதை நடை முறைப் படுத்தி வருகிறது.
இன்று சர்வதேச ரீதியாக சிறுவர் துஷ்பிரயோகம் பரவலாக இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன் தாக்கம் இலங்கையையும் பாதித்து வருகிறது. இலங்கையின் அயல் நடான இந்தியாவின் கலாச்சார பாரம்பரியங்கள் அடிக்கடி இலங்கையில் பிரதிபலித்து வருவதுதுண்டு.
குறிப்பாக இந்தியத் திரைப்படம், வானொலி தொலைக்காட்சி, சஞ்சிகைள் முதல் இருநாடுகளுக்கு மிடையிலான புவியியல், கலாச்சார, சமூக, மொழி போன்ற பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கு மிடையே இருந்து வரும் தொடர்புகளால் ஏற்படும வினைவுகளாகும்.
இன்று உலகிலே உச்ச நிலையில் பாலியல் வல்லுறவுகள் இடம் பெறும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் கலாச்சார ரீதியிலான கட்டுக் கோப்பில் இருந்து விடுபட்டு இன்று மேற்கத்தைய நாகரீகத்தை கடன் வாங்கியுள்ளதால் ஏற்பட்ட விளைவாகும். அதாவது இங்கு பலவந்தமாக நடக்கும் விடயம் மேற்கு உலகில் இணக்கத்துடன் நடக்கிறது. அங்கு இணக்கத்துடன் நடக்கும் எவ்வித தடையுமற்ற விடயம் கீழைத் தேசங்களில் வரையறை விதிக்கப்படுவதனால் குறிப்பிட்ட ஒரே விளைவை ஏற்படுத்தும் செய்கைகள் இரு பிராந்தியங்களில் இரு விதமாக நோக்கப் படுகிறது. அதாவது மேற்கு உலகில் ஒரு சில சர்வசாதாரண நிகழ்வுகள் கீழைத் தேய நாடுகளில் கடும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. எனவே அவை எல்லை மீறும் போது வல்லுறவாகிறது.
உதாரணமாக மேற்கு நாடுகளில் சாவசாதாரணமாக மதுப் பாவணை இருக்கும் அதே நேரம் எமது நாட்டில் அதற்குக் கட்டுப் பாடு விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு நாட்டு நடை முறையை நாம் பின் பற்ற முற்பட்டால் குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டு போகும். இதுபோலவே இந்தியாவில் பரவலாகவும் மற்றும் இலங்கையில் இலை மறைக் காய்களாகவும் சில விடயங்கள் இடம் பெறுகின்றன.
எனவே இப்படியான நிலைமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய சிறுவர் துஷ்பிரயோக தினம் நினைவு கூறப்படுகிறது.
Post a Comment