மூவின இளைஞர்களுக்காக பயிற்சி
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
பல்லின இனங்களுக்கிடையில் இன நல்லுறவையும், தொடர்பாடலையும் ஏற்படுத்தும் வகையில் யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் அனுசரனையுடன் இப்ஸ் சிரிலங்கா நிறுவனத்தினால் நடை முறைப்படுத்தப்பட்ட போரம் தியோட்டர் Forum Theater ) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்,முஸ்லிம் சிங்கள, மூன்று இனங்களைச்சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
அதன் இறுதி நிகழ்வு 15.01.2012 மட்டக்களப்புவை.எம்.சீ.ஏ. மண்டத்தில் இப்ஸ் நிறுவனத்தின் திட்ட இனைப்பாளர் வை.எம். நிம்ஸாத் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் ரீ.கடம்பநாதன், யூ.எஸ்.எயிட் நிருவனத்தின் நிகழ்ச்சி திட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் துர்கா கிரிஸ்னசாமி மற்றும் இப்ஸ் சிரி லங்கா நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் உள்ளீட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டோரையும், அதிதிகளுடன் பயிற்சி பெற்ற இளைஞர் அணியினர் குழுவாக இனைத்து எடுத்துக் கொண்ட படத்தினையும் நிகழ்வுகளையும் படங்களில் கானலாம்.
Post a Comment